pf balance : தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாக பி.எப். பங்கினை சம்பளத்தின் மூலம் செலுத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் சார்பில் ஒரு பங்கும், நிறுவனம் சார்பில் ஒரு பங்கும் பிஎப் கணக்கில் சேர்ந்து வருகிறது. தொழிலாளர், அந்த வேலையை விடும்போது, அந்த பி.எப். பணம், அவர்களுக்கு உற்றநேரத்தில் கைகொடுக்கிறது.
பி,எப். பணத்தை எவ்வாறு எடுப்பது என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அதேபோல், நமது சம்பளத்தில் இருந்து எத்தனை சதவீதம், பி.எப் கணக்கிற்கு சென்று சேருகிறது என்ற விஷயமும் தெரிவதில்லை. இதுபோன்ற விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
நாம் நமது UAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்கும் பட்சத்தில், பி.எப். பணத்தை கிளெய்ம் செய்வது மிக எளிதாகிறது. ஆப்லைன் முறையில், பி.எப். பணத்தை நாம் கிளெய்ம் செய்யமுடியாது என்று விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர், ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் கிளெய்ம் செய்திருந்தால், அவரது ஆன்லைன் கிளெய்ம் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு
இந்தியா முழுவதிலும் உள்ள 5 கோடி தொழிலாளர்களின் பி.எப். கணக்குகள் மூலம் ரூ.5 லட்சம் கோடியை நிர்வகித்து வருகிறது. தற்போது பி.எப். தொகை கேட்டு விண்ணப்பித்தால் பணம் கிடைக்க 30 நாட்கள் வரை ஆகிறது. இதை மாற்றி, 3 நாட்களுக்குள் கொடுக்க இபிஎப்ஓ திட்டமிட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பி.எப் பணத்துக்கு விண்ணப்பிக்கும் முறையை இபிஎப்ஓ அறிமுகம் செய்துள்ளது.
இனி வாடிக்கையாளர்கள் தங்களின் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணத்தை மாற்றவும், பணத்தை திரும்பப் பெறவும் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். தங்கள் விண்ணப்பங்களின் பரிசீலனை எந்த கட்டத்தில் உள்ளது என்பதையும் இன்டர்நெட் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
உங்கள் பணத்திற்கான நாமினியை நீங்களே தேர்வு செய்யலாம்!
1. பிஎஃப் பணத்திற்கான நாமினி விவரங்களைப் பதிவேற்ற என்ற இனைப்பிற்குச் சென்று உள்நுழைய வேண்டும். இந்தத் தளத்தில் உள்நுழைய யூஏஎன் மற்றும் ஆதார் எண் கட்டாயம் ஆகும்.
2. இணைப்பில் உள்நுழைந்த உடன் ‘Manage’ என்ற மெனுவிற்கு சென்று ‘E-Nomination’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
3. ‘E-Nomination’ என்பதை தேர்வு செய்தபின்பு உங்கள் யூஏஎன், பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களைப் பார்க்க முடியும். இந்தப் பக்கத்தில் உங்களது நிரந்தர முகவரியை உள்ளிட்டு ‘Save’ என்பதை கிளிக் செய்து சேமிக்க வேண்டும்.
மாத சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை! எப்படி எடுப்பது? வட்டி போன்ற முழு விவரங்களை இனி நீங்களே பார்க்கலாம்
4. நாமினேஷன் விவரங்களை அளிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைச் சேர்த்தால் 100 சதவீத பணத்தில் யாருக்கு எத்தனை சதவீதம் எனப் பிரித்து வழங்கி “Save EPF nomination’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. பின்னர் ஆதார் சரிபார்ப்பு செய்தபிறகு உங்கள் பிஎஃப் பணத்திற்கான நாமினி விவரங்கள் வெற்றிகரமாகப் பதிவேற்றப்படும். இதைச் செய்யும் போது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அச்சிடப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.