PF interest rate 2018-19 : இபிஎஃப் வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசு ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது சேமிப்புக்கு 8.65 சதவீதம் வட்டியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018-2019 நிதியாண்டுக்கான பிஎஃப் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தது.
தற்போது 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு 20.8% வருவான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள 8.65 சதவீத பிஎஃப் வட்டி, 10.92 சதவீதத்துக்கு சமமாகும்.
இதேபோன்று, 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு பிடித்தம் செய்யப்படும் 34.32 சதவீதம் வருமான வரியின் அடிப்படையில், பி.எஃப் வட்டி விகிதமான 8.65, 13.17 சதவீதத்துக்கு சமமாகிவிடும்.
மேலும் ஒரு கோடிக்கு மேல், ஆண்டு வருமானம் உள்ளோருக்கு பிடித்தம் செய்யப்படும் 35.88 சதவீதம் வருமான வரி பிடித்தத்தின்படி கணக்கிட்டால், வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிஎஃப் வட்டி விகிதம் 13.5 சதவீதமாக உயரும்.
அதாவது, வருமான வரி பிடித்தத்துக்கான உச்சவரம்பு உயர, உயர, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பி.எஃப் வட்டிக்கான விகிதமும் அதிகரிக்கும். இந்த நடைமுறை அடுத்த வாரம் முதக் அமலுக்கு வருகிறது.
பி.எஃப் வலைதளத்தில் பணத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எடுக்க முடியும். விண்ணப்பித்ததும் உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்படும். பிறகே, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குக்கு பி.எஃப் பணம் நேரடியாக அனுப்பப்படும். இப்போது ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வதன் மூலம், இதுவரை 20 நாள்களாக இருந்த எண்ணிக்கை குறைந்து பி.எஃப் பணம் உடனடியாக கைக்கு வந்துவிடும்.
ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம்! 26 ஆம் தேதி முதல் அமல்
தெரியாதவர்களுக்கும் முடிந்த வரை பகிருங்கள். பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க பிஎஃப் அலுவலகத்திற்கு நேரில் சென்று கால் கடக்க வரிசையில் நிற்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.அதுவும் வெளியில் அடிக்கிற வெயிலுக்கு நீங்கள் அலைய வேண்டிய அவசியமே வேணாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.