pf interest rates : தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம்(PF) உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருங்கால வைப்புநிதி வட்டியை 0.10% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து PF பிடிப்பது பொதுவான நடைமுறை என்பது யாவரும் அறிந்ததே. இது தொழிலாளர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் அவசர தேவைக்கு அவர்களின் கணக்கில் வைப்பில் இடப்படும்.
மத்திய அரசு பிஎஃப் எடுத்தல் மற்றும் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு e-inspection system என்ற புதிய நடைமுறையும் அறிமும் செய்ய இருக்கிறது.உங்களின் பிஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும். இவ்வாறு செய்தால் உங்களின் பிஎஃப் கணக்கு வட்டி விகிதம், உங்கள் நிறுவனம் அளிக்கும் தொகை போன்ற அனைத்து விவரங்களும் தெரிந்து விடும்.
இபிஎஃப் வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, மத்திய அரசு ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது சேமிப்புக்கு 8.65 சதவீதம் வட்டியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018-2019 நிதியாண்டுக்கான பிஎஃப் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். தற்போது 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு 20.8% வருவான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள 8.65 சதவீத பிஎஃப் வட்டி, 10.92 சதவீதத்துக்கு சமமாகும்.
உங்களின் பிஎஃப் பணத்திற்கான நாமினி பெயரை இனி நீங்களே மாற்றலாம்!
கடந்த 2017 - 18 ஆம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய அரசு தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வகிதம் 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக மத்திய அரசு இன்று உயர்த்தியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பி.எஃப் வலைதளத்தில் பணத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எடுக்க முடியும். விண்ணப்பித்ததும் உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்படும். பிறகே, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குக்கு பி.எஃப் பணம் நேரடியாக அனுப்பப்படும். இப்போது ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வதன் மூலம், இதுவரை 20 நாள்களாக இருந்த எண்ணிக்கை குறைந்து பி.எஃப் பணம் உடனடியாக கைக்கு வந்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.