Advertisment

PF Withdrawal Online: வேறு எங்கும் போய் அலைய வேண்டாம்! உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா

EPF withdrawal Guide 2019 : பிஎஃப் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப பெறுவதற்கான வசதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
PF balance check online

PF balance check online

pf money withdrawal online : மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பல உள்ளன. பணியில் இருந்து ஓய்வுபெறுபவர்கள் தங்களது பிஎஃப் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப பெறுவதற்கான வசதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Advertisment

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

எஸ்பிஐ -யில் வசூலிக்கப்படும் கட்டண விபரங்கள்.. முழு விபரம்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

PF Withdrawal Procedure : பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைனில் விண்ணப்பித்துத் திரும்பப் பெறுவது எப்படி?

1. ஆன்லைனைல் பிஎஃப் பணத்தை திரும்பப் பெற ஈபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ மூலம் விண்ணப்பிக்கலாம்.

2. உள்நுழைய யூஏஎன் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும்.

3. பின்னர் கேப்ட்சா குறியீட்டை குறிப்பிட்டு லாக்-இன் செய்யவும்.

4. அடுத்து ‘Manage’ டேப் சென்று ‘KYC’-ஐ கிளிக் செய்து, ஆதார், பான் எண், வங்கி கணக்கு போன்ற விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். இவை ஏற்கனவே நிறுவனம் சார்பாகப் பதிவேற்றப்பட்டுச் சரிபார்க்கப்பட்டு இருந்தால் எளிதாக பணத்தைத் திரும்பப் பெறலாம்.

5. KYC விவரங்கள் சரியாக இருக்கும் போது, பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு ‘Online Services’ சென்று ‘Claim form-31,19&10c என்ற தெரிவை கிளிக் செய்ய வெண்டும்.

6. அடுத்து வரும் பக்கத்தைப் பூர்த்தி செய்து, எந்த காரணத்திற்காகப் பணத்தைத் திரும்பப் பெறுகிறோம் என்பதைத் தேர்வு செய்து, ஆதார் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுக் கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment