/tamil-ie/media/media_files/uploads/2017/07/Money.jpg)
PF Withdrawal Online: மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு பி.எஃப் ஓர் சிறந்த சேமிப்பு முறை. பணி ஓய்வு பெறும் சமயங்களில், இந்த சேமிப்பு பணத்தை தான், பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கிடையில் தேவைப்பட்டாலும், நேரடியாகவோ ஆன்லைன் மூலமோ இதிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். உங்களது ஆதார் எண் UAN எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஆன்லைன் மூலம் பி.எஃப் பணத்தைப் பெற முடியும்.
ஆன்லைனில் எவ்வாறு பி.எஃப் பணத்தைப் பெறுவது?
UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டைக் கொண்டு EPFO போர்டலை லாக் இன் செய்துக் கொள்ளவும்.
‘Manage’ என்பதை க்ளிக் செய்து, KYC விபரங்களை வெரிஃபை செய்துக் கொள்ளவும்.
’Member Details’ திரையில் தோன்றும். அதில் உங்களது வங்கி சேமிப்பு கணக்கின் இறுதி 4 எண்களை பதிவு செய்து வெரிஃபை செய்யவும்.
இந்த செயல்முறையை மேலும் தொடர, ‘Yes’ என்ற பட்டனை அழுத்தவும்.
ஆன்லைனில் பி.எஃப் விண்ணப்பிக்கும் முறையில் 3 விண்ணப்பங்கள் உள்ளன.
1. Form 19 - இது முழு பி.எஃப் தொகையையும் பெறுவதற்காக.
2. Form 10C - பென்சன் தொகையைப் பெறுவதற்கு.
3. Form 31 - பி.எஃபில் ஒரு பகுதியைப் பெறுவதற்காக.
உங்களுக்கு எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்த பின்பு, ‘proceed for online claim’ என்பதை க்ளிக் செய்யவும்.
அப்ரூவ் ஆகிவிட்டால் அடுத்த பத்து நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பி.எஃப் பணம் கிரெடிட் ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.