ராஜஸ்தானில் உள்ள உப்புக் குகைகளில் இருந்து பெட்ரோலிய பொருள்கள் எடுக்கும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடரபான ஆராய்ச்சியில் பொதுத்துறை ஆலோசனை நிறுவனமான பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) ஈடுபட்டுவருகிறது.
இந்த நிறுவனம் அங்குள்ள வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வர்த்திகா சுக்லா கூறுகையில், “இந்தத் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. ஜெர்மனியில் உள்ளது. ஏற்கனவே, நாட்டில் மங்களூரு, படூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் மூன்று பெட்ரோலிய இருப்புக்கள் உள்ளன.
ஆனால் இவை அனைத்தும் தோண்டப்பட்ட பாறை குகைகளால் ஆனவை. ராஜஸ்தானில் உள்ள உப்பு பாறைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
இதில் பெட்ரோலிய இருப்புகள் குறித்து தற்போது ஆய்வுகள் தொடர்கின்றன” என்றார்.
தொடர்ந்து, சாத்தியமான திட்டச் செலவு மற்றும் ஏதேனும் குறிப்பிட்ட தளம் பரிசீலிக்கப்படுகிறதா என்று கேட்கப்பட்டபோது, ஒரு குறிப்பிட்ட தளத்தில் செலவு மதிப்பீடு விரைவில் வெளியிடப்படும் என்றார்.
அந்த வகையில் ராஜஸ்தானின் பார்மரில் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளது.
இது தொடர்பாக அவர், “தொழில்நுட்பம் அல்லது அறிவு இருந்தால், அதன்பிறகுதான் என்ன வகையான செலவுகள் ஈடுபடுத்தப்படும் என்பதை மதிப்பீடு செய்ய முடியும்.
மேலும் பல காரணிகளும் உள்ளன. திட்ட அனுமதிக்கு பல படிகள் இருக்கும், அவை படிப்படியாக எடுக்கப்படும். ஆனால், இந்தியா அந்தத் தொழில்நுட்பத்தைப் பெறுவது முக்கியம்.
EIL அந்தத் தொழில்நுட்பத்தைப் பெறுகிறது. ஒரு மதிப்பீட்டைப் பெற்று, அது எவ்வளவு சாத்தியமானது என்பதைப் பார்க்க வேண்டும்” என்றார்.
இந்தியாவின் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்கள் 5.33 மில்லியன் டன் கச்சா மொத்தத் திறனைக் கொண்டுள்ளன. மேலும் நாட்டின் எண்ணெய் தேவையில் சுமார் 9.5 நாட்கள் பூர்த்தி செய்ய முடியும்.
மூலோபாய எண்ணெய் இருப்புக்கள் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“