Advertisment

45 வயதிலே ”ரிட்டயர்மென்ட் ப்ளான்” வச்சுருக்கீங்களா... இந்த எஸ்.ஐ.பி. திட்டம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் !

Plan to retire in 45 years you must know this sip plan gives 5 crore: 45 வயதில் ஓய்வு பெற விரும்புபவர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டம் இதோ...

author-image
WebDesk
New Update
சிறுகுறு வர்த்தக நிறுவனங்களை மொத்தமாக பாதித்த கொரோனா இரண்டாம் அலை! 60% ஆக அதிகரித்த கடன்

பெரும்பாலானோருக்கு வேலையிலிருந்து ஓய்வு என்பது கிட்டத்தட்ட 60 வயதில் தான். சிலர் வாழ்க்கை முழுக்க உழைத்துக் கொண்டிருப்பர். அது வேறு. ஆனால் இன்றைய நவீன காலத்தில் சிலர், 40 – 50 வயது வரை கடுமையாக உழைத்து, செல்வத்தைச் சேர்த்து விட்டு, சீக்கிரமே ஓய்வு பெற வேண்டும் என்பது விருப்பம்.

Advertisment

45 வயதில் ஓய்வு என்பது மிகப்பெரிய முடிவு. ஏனெனில், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பாதி அளவைத் தான் தாண்டியுள்ளீர்கள். மீதி பாதி வாழ்க்கைக்கான வருமான உத்திரவாதம், ஓய்வின் போது மிக அவசியம். இதற்கு நீங்கள் வருமானம் ஈட்டும்போதே, தகுந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்கள் ஓய்வுக்காலம் இனிமையாக இருக்கும்.

உங்களுடைய மாத வருமானம் கணிசமான அளவு இருக்கும் போது சிறந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. 45 வயதிலேயே ஓய்வு பெறுவதற்கான உங்கள் திட்டம் அதிக முதலீடு செய்ய உங்களை ஊக்குவிக்கும். ஒருவரின் மாத வருமானம் ஒரு லட்சத்திற்கும் மேலும், அதில் சுமார் ரூ. 25000 ஈஎம்ஐக்கும் செலுத்தினால், அவரின் ஓய்வூதியத்துடன் அவரது தற்போதைய பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை கீழ்கண்டவாறு கருதலாம். நீங்கள் 45 வயதாக இருக்கும்போது உங்கள் முதலீட்டின் வளர்ச்சி விகித மதிப்பு ஆண்டிற்கு 10% வட்டி விகிதத்தில் ரூ .62 லட்சமாக இருக்கும். அல்லது 12 % ல் ரூ .78.50 லட்சம் ஆக இருக்கும்.

உங்கள் தற்போதைய பணப்புழக்கத்தின்படி, உங்கள் ஈ.எம்.ஐ ரூ .25,000 செலுத்திய பிறகு, ஒவ்வொரு மாதமும் உங்கள் கையில் ரூ .85,000 இருக்கும். இந்த மீதமுள்ள தொகையிலிருந்து உங்கள் வீட்டு மற்றும் தனிப்பட்ட செலவினங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும், இந்த தொகையை அனுமானிப்பது கடினம், ஆனால் பொதுவாக இது உங்கள் வருமானத்தில் 25-30% ஆகும். அவ்வாறான நிலையில், முதலீடு செய்ய உங்களுக்கு மாதத்திற்கு சுமார் ரூ .60,000 மிச்சமாகும். இந்த தொகையை நீங்கள் ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், 45 வயதிற்குள் உங்களுக்கு ஆண்டிற்கு 10% வட்டி விகிதத்தில் சுமார் ரூ .1.85 கோடி அல்லது 12% வட்டியில் ரூ .2.14 கோடி கிடைக்கும், உங்களுடைய தற்போதைய முதலீட்டையும் இதில் சேர்க்கும்போது, ​​நீங்கள் ரூ .2.5 கோடியிலிருந்து ரூ .3 கோடியைக் குவிக்கலாம்.

எனவே, உங்கள் தற்போதைய முதலீடுகள் மற்றும் வருமானத்தின்படி, உங்கள் திட்டங்களை 45 வயதிற்குப் பிறகு இன்னும் சில வருடங்களுக்குள் நீங்கள் ஓய்வூதியத்திற்கு தள்ள வேண்டியிருக்கலாம். முடிந்தால் உங்கள் ஈ.எம்.ஐ செலுத்திய பிறகு நீங்கள் அதிக முதலீடு செய்யலாம், மேலும் இது எதிர்காலத்தில் அதிக வருமானத்தைக் குவிக்க உதவும். அதே நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முதலீட்டை 16% அதிகரிக்க நீங்கள் திட்டமிடலாம், அவ்வாறு செய்தால் உங்கள் தொகை 12% வட்டி விகிதத்தில் ரூ .5 கோடியை எட்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Investment Scheme Best Investment Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment