Advertisment

கார் வாங்கற ப்ளான் இருக்கா? அப்போ இத நோட் பண்ணிக்குங்க!

Tips For Buying A Car The Smart Way in tamil: காரைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​பராமரிப்பு, எரிபொருள், காப்பீடு, பதிவு மற்றும் வரிகள் போன்ற செலவுக் காரணிகளை முக்கியமாக பார்க்கவும்.

author-image
WebDesk
Jun 03, 2022 16:59 IST
planing to buy a car? Note this tips first

How to buy a car without burning your pocket Tamil News

Business tips in tamil: இந்தியாவில் கார்களின் விலை ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஆண்டில் மட்டும், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹூண்டாய், கியா, டொயோட்டா மற்றும் எம்ஜி மோட்டார் போன்ற பல வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளனர். இதனால், கார் வாங்க ஆவல் கொண்டுள்ள நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisment

கார் வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. இது பெரிய முதலீடாகவும் உள்ளது. எனவே, ஒரு காரை வாங்குவதற்கு முன் பல காரணிகளை சரியாக திட்டமிட்டு மதிப்பீடு செய்ய வேண்டும். சரியான தயாரிப்புடன், முழு செயல்முறையையும் ஒரு சுமையாக மாற்றாமல் ஒரு காரை வாங்க முடியும். அப்படி செலவே இல்லாமல் கார் வாங்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

கார் வாங்குவது எப்படி?

படி 1 : மனக்கணக்கு - கார் கடன்

படி 2 : உரிமையின் விலையைக் கணக்கிடுதல்

படி 3 : சரியான காரைத் தேர்ந்தெடுக்கவும்

படி 4 : டெஸ்ட் டிரைவ் எடுத்தல்

publive-image

மனக்கணக்கு - கார் கடன்

ஒரு காரை வாங்குவதற்கு முன், முதல் படி மொத்த கடன் தொகை மற்றும் வாங்குபவர் எவ்வளவு வாங்க முடியும் என்பதைக் கணக்கிட வேண்டும். மாதாந்திர இஎம்ஐ (சமமான மாதாந்திர தவணை - Equated monthly installment) தொகையானது வாங்குபவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 60 மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.

பயன்படுத்திய காரைப் (second hand car) பொறுத்தவரை, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 36 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கணக்கீடு முடிந்த பிறகு, மலிவு வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்கும் கடனாளியைக் கண்டறிய தயாராக வேண்டும். முன்-அங்கீகரிக்கப்பட்ட கார் கடனைப் பெறுவது, டீலருடன் சிறந்த பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ள வேண்டும்.

உரிமையின் விலையைக் கணக்கிடுங்கள்

ஒரு கார் முன்கூட்டிய செலவு மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் செயல்படும் செலவுகளையும் கொண்டுள்ளது. வாகனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​பராமரிப்பு, எரிபொருள், காப்பீடு, பதிவு மற்றும் வரிகள் போன்ற செலவுக் காரணிகளை ஸ்டிக்கர் விலையுடன் சேர்த்து உரிமைச் செலவில் சேர்க்க வேண்டும்.

காருக்கான பட்ஜெட்டை அமைப்பதற்கான திறவுகோல் இதுதான். காரின் மாதாந்திரச் செலவு, கடனைத் திருப்பிச் செலுத்துதல் உட்பட, வாங்குபவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தில் 20 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

சரியான கார் தேர்வு

தேவையின் அடிப்படையில், நடைமுறையை கருத்தில் கொண்டு ஒரு காரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல வாடிக்கையாளர்கள் ஆர்வக் கோளாறில் சொகுசு காரை அதன் கவர்ச்சியின் காரணமாக, உரிமையின் விலையை மதிப்பிடாமல் வாங்கிறார்கள். இதனால் இஎம்ஐ கட்டமுடியாமல் திண்டாடி, பின்னர் காரைத் திருப்பி கொடுத்துவிடுகிறார்கள்.

டெஸ்ட் டிரைவ்

விருப்பமான காரைத் தேர்ந்தெடுத்த பிறகு, வாகனத்தின் சோதனை ஓட்டத்திற்கு (டெஸ்ட் டிரைவ்) எடுக்கவும். ஒரு டெஸ்ட் டிரைவ் அதை நன்றாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவாது. அப்படியானால், பல டெஸ்ட் டிரைவ்களை எடுக்கவும். டெஸ்ட் டிரைவ்வின் போது காரின் அனைத்து அம்சங்களையும் சரிபார்க்கவும். உங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அவர்களின் கருத்து முக்கியமானது. டெஸ்ட் டிரைவ்வில் திருப்தி அடைந்த பிறகு, வாகனத்தை வாங்க முடிவு செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Business Update #Business #Car Loan #Car
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment