Planning to buy a two-wheeler : கொரோனா பெருந்தொற்று காலங்களில் பொது போக்குவரத்து எப்போது வேண்டுமானாலும் தடை பெறலாம் என்ற நிலை வரும் போது சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பது நல்லது தானே. நடுத்தர குடும்பத்தினர் பலருக்கும் ஒரு இரண்டு சக்கர வாகனம் என்பது நீண்ட நாள் கனவு போன்று இருக்கும். லோன் வாங்கியாவது வாங்கிவிடலாம் என இந்த ஆண்டு வண்டி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்கிறீர்களா? இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான்.
Advertisment
இருசக்கர வாகனங்கள் வாங்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் வண்டியை தேர்வு செய்வதற்கு முன்பு எங்கே குறைந்த வட்டியில் லோன் கிடைக்கிறது என்பதை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். இரு சக்கர வாகனங்களுக்கான லோன்களை மிகவும் எளிதாக வாங்கிக் கொள்ள இயலும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகளுடன் வங்கிகள் லோன்களை வழங்கி வருகிறது. எந்தெந்த வங்கிங்களில் எவ்வளவு வட்டி கடன் மீது வசூலிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது கீழே உள்ள பட்டியல்
முதலில் வங்கிகள் தரும் லோன்களையும் அதற்கான வட்டியையும் ஒப்பீடு செய்யுங்கள்
உங்களின் கடன் வாங்கும் தகுதிமற்றும் கிரெடிட் ஸ்கோர்கள் அடிப்படையில் இதில் மாற்றங்களும் ஏற்படும்
அவை மட்டுமின்றி இந்த லோனுக்கான ப்ரோசசிங் கட்டணம் எவ்வளவு, ப்ரீபேமெண்ட் எவ்வளவு செலுத்த வேண்டும் மற்றும் எவ்வளவு நாட்களுக்குள் உங்களுக்கு உங்களின் வண்டிக்கான கடன் கிடைக்கும் ஆகியவற்றையும் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள்
சில வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளே, அவர்களின் கிரெடிட் ஸ்கோர்களை கவனத்தில் கொண்டு ப்ரீ அப்ரூவ்ட் லோன்களை வழங்குகிறது.
ஆதார் அட்டை, பான் அட்டை, வருமான சான்றுகள் ஆகியவற்றை கையில் வைத்திருப்பது மிகவும் நல்லது.
அதே போன்று உங்களால் திருப்பி செலுத்த முடியும் மதிப்பு எவ்வளவோ அதனை அடிப்படையாக கொண்டு கடனை வாங்குங்கள். அதற்கு மேல் வாங்கும் பட்சத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுகளில் பெரிய பிரச்சனை ஏற்படும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil