scorecardresearch

மருத்துவ காப்பீடு; குறைந்த பிரீமியம் உடைய பாலிசி எது தெரியுமா?

மருத்துவக் காப்பீடு வாங்க திட்டமிடுகிறீர்களா? குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசிகளின் ஒப்பீடு இங்கே

மருத்துவ காப்பீடு; குறைந்த பிரீமியம் உடைய பாலிசி எது தெரியுமா?

Planning to buy health insurance? Compare the cheapest premiums: கொரோனா தொற்றுநோயால் வரலாற்றில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடிகளில் ஒன்றை எதிர்கொண்ட பிறகு, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்க முடியாது. ஆரோக்கியமே நமது உண்மையான செல்வம், இந்த செல்வத்தைப் பாதுகாக்க, நமக்கு மருத்துவக் காப்பீடு தேவை. மருத்துவக் காப்பீடு இல்லாத நிலையில், மக்கள் தங்களுடைய மருத்துவக் கட்டணங்களை சமாளிப்பது சவாலாக இருப்பதைக் காண்கிறார்கள் மற்றும் சில சமயங்களில் தங்கள் வாழ்நாள் வருவாயை இழக்க நேரிடும். பாதிக்கப்பட்ட குடும்பம் தங்களுடைய வீடு, தங்கத்தை விற்க அல்லது மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்த முழுச் சேமிப்பையும் கூடச் செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

இந்தப் பின்னணியில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது அதிக மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்தவும், நிதி நெருக்கடியைத் தவிர்க்கவும் உதவும் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பல காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. ஒவ்வொரு பாலிசியும் வேறுபட்டது, மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியங்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

மருத்துவக் காப்பீடு பொதுவாக ஒரு நீண்ட கால பாலிசியாகும். எனவே, பாலிசியின் அனைத்து விதிமுறைகளையும் சலுகைகளையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது. நீங்கள் சம்பாதிக்க தொடங்கும், ​​சிறு வயதிலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. பழைய பாலிசியில், பலன்கள் அதிகம். புதிய பாலிசிகள் பெரும்பாலும் அடிப்படை கவரேஜை வழங்குகின்றன, மேலும் உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கிய 2-5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முக்கியமான நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீடு கிடைக்கும். மருத்துவ அவசரநிலை உங்களை எந்த நேரத்திலும் தாக்கலாம்; அதனால்தான், பேங்க்பஜாரின் கூற்றுப்படி, அதற்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

அதிக செலவுகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் காரணமாக நீங்கள் வயதான பின்னர், மருத்துவக் காப்பீட்டை வாங்குவது கடினமாகிறது. நீங்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்குவதைத் தொடர்ந்து ஒத்திவைத்தால், அதிக ஆபத்துகள் உள்ளன. மருத்துவ அவசரநிலை ஏற்படும் போதெல்லாம் உங்கள் மருத்துவக் காப்பீட்டின் கீழ் பலன்களைப் பெறலாம்.

பெரும்பாலும் கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டு பாலிசிகள் மக்களால் விரும்பப்படுகின்றன, ஆனால் நீங்கள் பணமாக செலுத்திய கட்டணங்களை திரும்ப பெற கூடிய பாலிசிகளும் உள்ளன. உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கும் முன் அதன் பலன்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவைப்படும்போது பலன்களைப் பெற இது உதவுகிறது. சில சமயங்களில் பாலிசியை வாங்கிய நபர் ஒரு முக்கியமான நோயை மறைத்துவிட்டாலோ அல்லது சரியான தகவலைத் தராமல் இருந்தாலோ, ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உங்கள் கோரிக்கைகளை (க்ளைம்) நிராகரிக்கின்றன. சில பாலிசிகளை வாங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் மூத்த குடிமகனாகவோ அல்லது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவராகவோ இல்லாமல் இருந்தால், தற்போது பெரும்பாலான பாலிசிகளை மருத்துவப் பரிசோதனையின்றி வாங்கலாம்.

இதையும் படியுங்கள்: IRCTC News: இதை சரியா ஃபாலோ பண்ணுனா ரயில் டிக்கெட் கன்ஃபார்ம்; தட்கல் புக்கிங் சீக்ரெட்ஸ்!

மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளின் சிறந்த அம்சம் என்னவென்றால், காப்பீட்டு வழங்குநரின் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனைகள் உங்களுக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை அளிக்கும். நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு, நீங்கள் செலுத்திய தொகைகளை திரும்ப பெற கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். எளிமையான வார்த்தைகளில், காப்பீடு என்பது சாத்தியமான நிதி அபாயங்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான இடர் மேலாண்மைக் கருவியாகும்.

சுகாதார பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூர் மருத்துவமனைகளின் நம்பகமான நெட்வொர்க்குடன் நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் இருந்தால், உங்கள் செலவுகள் குறைவாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், சிறப்பு சிகிச்சை பெறுவதற்கு நீங்கள் ஒரு பெரிய நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, மருத்துவமனைகளில் சிரமமின்றி சிகிச்சைப் பெற அனுமதிக்கும் பாலிசியை வாங்கவும்.

மற்ற செலவுகளைப் போலவே, உங்கள் மருத்துவச் செலவும் அதிகரிக்கிறது. உங்கள் மருத்துவ காப்பீட்டை நீங்கள் வாங்கும் முன்னர் பணவீக்கத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்த மருத்துவ அவசரநிலையையும் ஈடுகட்ட போதுமான தொகையைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் வயது, மருத்துவ வரலாறு, புகையிலை மற்றும் மது பழக்கம், நகரம், மாவட்டம் போன்றவற்றைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மாறுபடலாம். மேலும், உங்கள் வயது மற்றும் முன்பே இருக்கும் சுகாதார நிலைகள் உங்கள் மருத்துவக் காப்பீட்டின் விலையைத் தீர்மானிக்கலாம்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது, பிரிவு 80D இன் கீழ் வரியைச் சேமிக்க உதவுகிறது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், உங்கள் வயதின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை, உங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும். இது பிரிவு 80C வரம்பை விட அதிகமாக உள்ளது. நீங்கள் மூத்த குடிமகனாக இருந்தால், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதன் மூலம் ரூ. 1 லட்சம் வரை வருமான வரியைச் சேமிக்கலாம்.

ரூ.5 லட்சம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் விலை என்ன?

குறிப்பு: மேற்கண்ட பாலிசி விவரங்கள், உங்களின் சுகாதார நிலை மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் மாறுதலுக்குட்பட்டவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Planning to buy health insurance compare the cheapest premiums

Best of Express