பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டமாகும். வரி சலுகை மற்றும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையின் காரணமாக பிரபலமான முதலீட்டு திட்டமாக அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்த திட்டத்தை வழக்கமான டெபாசிட் திட்டங்களைப் போல் கருதலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிபிஎஃப் ஒவ்வொரு ஆண்டும் உத்தரவாதமான அல்லது உறுதியான வருமானத்தை வழங்குகிறது, இருப்பினும், சரியான எண்ணிக்கை மாறுபடுகிறது. பிபிஎஃப் தற்போது 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது, மேலும் இது ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது. இந்த முதலீட்டு திட்டத்தில் உள்ள குறை என்னவென்றால், ஒருவர் ஒரு வருடத்தில் பிபிஎஃப் -ல் 1.5 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
வருடாந்திர முதலீட்டு தொகை 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே என வரையறுக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பான நிலையான வருமானம் கொண்ட தயாரிப்புகளில் PPF ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, நிலையான வருவாய் விகிதம் மற்றும் பிபிஎஃப்-ல் லாபத்தை கணிக்கக்கூடிய தன்மை காரணமாக இது ஒரு சிறந்த தேர்வாகும். PPF இல் முதலீடு செய்வது நிதி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் PPF இன் முதிர்வு தொகை மற்றும் முதலீட்டு காலத்தில் பெறப்பட்ட ஒட்டுமொத்த வட்டிக்கு வரி இல்லை.
PPF இன் அனைத்து நன்மைகளோடு, கவனிக்கப்படாத சில குறைபாடுகளும் உள்ளன. உதாரணமாக, பிபிஎஃப் என்பது ஒரு நீண்ட கால முதலீடாகும், பிபிஎஃப் 15 வருட முதிர்வு காலத்துடன் வருவதால், முதலீட்டு தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் பணத்தை அணுக முடியாது. இருப்பினும், ஒரு முதலீட்டாளர் முதிர்வு காலத்திற்குப் பிறகு தங்கள் பிபிஎஃப் முதலீட்டைத் தொடர விரும்பினால் 5 வருடங்களுக்கு நீட்டிக்கலாம். இதனை தொடர்ந்து ஐந்தைந்து ஆண்டுகளாக நீட்டித்துக் கொண்டே போகலாம். ஒரு முதலீட்டாளர் தங்கள் பிபிஎஃப் கணக்கை முதிர்வுக்குப் பிறகும், புதிய பங்களிப்பு எதுவும் செய்யாமல் ஆக்டிவ் ஆக வைத்திருக்க முடியும். PPF கணக்கு முதிர்வுக்குப் பிறகு வரி இல்லாத வட்டியை சம்பாதிக்கிறது.
இந்த முதலீட்டு பாதையின் மற்றொரு முக்கியமான குறைபாடு அதன் நிலையான வருமானமாகும். பொருளாதாரத்தில் அதிக பணவீக்கம் ஏற்பட்டால், இந்த முதலீட்டு வழியிலிருந்து வரும் வருமானம் ஒருவரின் முதலீடு செய்யப்பட்ட செல்வத்தை பாதுகாக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
PPF வழக்கமாக ஒரு நிலையான வட்டி விகிதத்தை வழங்கினாலும், இதைவிட பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்கள் (MF) போன்ற சந்தை-இணைக்கப்பட்ட கருவிகள் அதிக வருமானத்தை வழங்குவதாக அறியப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அபாயத்தை எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள், பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த எம்எஃப்கள் போன்ற ஈக்விட்டி இணைக்கப்பட்ட முதலீடுகளில், சிறந்த லாபத்திற்காக முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முதலீடுகள் அதிக அபாயங்களைக் கொண்டுள்ளன, எனவே, கவனமாக பரிசீலனை செய்து, ஆபத்து எடுக்க விரும்புவர்கள் மட்டும் இவற்றில் முதலீடு செய்யுங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil