பிஎம் கிசான் 10-வது தவணை கிடைக்கவில்லையா? உதவி எண்கள் இதோ…

பிஎம் கிசான் திட்டத்தின் 10வது தவணை தொகை கிடைக்கப் பெறாதவர்கள் என்ன செய்வது என்பதைப் இங்கு பார்க்கலாம்.

PM kisan 10th installment what should you do if payment not received: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 10வது தவணைத் தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள் என்ன செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 அன்று, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10வது தவணையாக ரூ.2,000-ஐ பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ஆனால், இன்னும் சில விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வராததால், அவர்களது கணக்குகளுக்கு ஏன் பணம் வரவில்லை என அந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தவணை வெளியான பிறகும், 10வது தவணை பணம் இன்னும் வராத விவசாயிகள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகள் தங்கள் பயனாளி நிலையை சரிபார்க்கும் போது, ​​’விரைவில் வரும்’ என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அதாவது விரைவில் உங்கள் கணக்கில் பணம் வந்து சேரும்.

பட்டியலில் உங்கள் பெயரை செக் செய்வது எப்படி?

1. PM Kisan Yojana, இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pmkisan.gov.in/ பார்வையிடவும்.

2. முகப்பு பக்கத்தில், விவசாயிகள் கார்னர் என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.

3. இதற்குப் பிறகு, விவசாயிகள் கார்னர் பிரிவில், நீங்கள் பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

4. கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

5. Get Report என்பதில் கிளிக் செய்யவும். அதன் பிறகு, ஒரு புதிய திரை திறக்கும். இதில் பயனாளிகளின் முழுமையான பட்டியல் தோன்றும், அதில் உங்கள் பெயரை நீங்கள் சரிபார்க்கலாம்.

மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளை நீக்க ஹெல்ப்லைன் எண் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் புகார்களை இந்த எண்களில் பதிவு செய்யலாம்.

1. PM கிசான் ஹெல்ப்லைன் எண்:155261

2. PM கிசான் மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109

3. PM கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011—23381092, 23382401

4. PM கிசான் கட்டணமில்லா எண்: 18001155266

5. PM கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606

6. மின்னஞ்சல் ஐடி: pmkisan-ict@gov.in

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm kisan 10th installment what should you do if payment not received

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express