PM kisan 2000 rs not credited see helpline number and complaint process: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM KISAN) என்பது நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி பெறுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ரூ 2000 வீதம் மூன்று தவணைகளில் தொகை மாற்றப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை, 10 தவணைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டார். இதன் மூலம் விவசாயிகளின் கணக்கில் 2000 ரூபாய் வரத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய். 21,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் சில விவசாய மக்களின் கணக்கிற்கு பணம் வந்து சேரவில்லை. அப்படி உங்கள் கணக்கிலும் பிரதமரின் கிசான் திட்ட 11வது தவணை செலுத்தப்படவில்லை என்றால், நீங்கள் உடனடியாக மத்திய வேளாண் அமைச்சகத்திடம் புகார் செய்யலாம். அதற்கான எளிய செயல்முறையை இங்கு ஒன்றன் பின் ஒன்றாக தெரிந்து கொள்வோம்.
எங்கு, எப்படி புகார் செய்யலாம்?
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் உங்கள் கணக்கில் 11வது தவணை செலுத்தப்படவில்லை என்றால், நீங்கள் முதலில் உங்கள் பகுதியில் உள்ள கணக்காளர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கவில்லை எனில், நீங்கள் இத்திட்டத்திற்கான ஹெல்ப் - லைனை தொடர்பு கொள்ளலாம். இந்த ஹெல்ப் - லைன் (பி.எம்.கிசான் ஹெல்ப் டெஸ்க்) திங்கள் முதல் வெள்ளி வரை விவசாய மக்களுக்காக திறந்திருக்கும்.
இவை தவிர, pmkisan-ict@gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 011-23381092 (நேரடி ஹெல்ப்லைன்) என்கிற எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய விவசாய அமைச்சகத்தில் புகார் செய்வது எப்படி?
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் தவணை விவசாய மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என்றால், அதற்கான தீர்வு உடனடியாக கொடுக்கப்படும் என்றும், வங்கிக் கணக்கில் பணம் சேரவில்லை என்றாலோ அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ அது சரி செய்யப்படும். இத்திட்டத்தின் பயனை ஒவ்வொரு விவசாயியும் பெற அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது என்றும் மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வழியிலும் தொடர்பு கொள்ளலாம்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் நிலையை தற்போது நீங்களே சரிபார்த்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் உழவர் நலப் பிரிவிற்கும் நீங்களே தொடர்பு கொள்ளலாம். தலைநகர் டெல்லியில் உள்ள அதன் தொலைபேசி எண் 011-23382401 மற்றும் மின்னஞ்சல் ஐடி (pmkisan-hqrs@gov.in) இதுவாகும்.
மத்திய விவசாய அமைச்சகத்தை தொடர்பு கொள்ளும் உதவி எண்கள் பின்வருமாறு:-
பிஎம் கிசான் இலவச எண்: 18001155266
பிஎம் கிசான் ஹெல்ப்லைன் எண்:155261
பிஎம் கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011—23381092, 23382401
பிஎம் கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606
பிஎம் கிசானுக்கு மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.