/indian-express-tamil/media/media_files/2025/10/20/pm-kisan-farmer-2025-10-20-07-10-48.jpg)
பி.எம் கிசான் 21வது தவணை தகவல்: அடுத்த தவணையை அரசு எப்போது வழங்கும் - எந்தப் பயனாளிகளுக்குப் பலன்கள் கிடைக்காது
கோடிக்கணக்கான விவசாயிகள் பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 21வது தவணைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நவம்பர் முதல் வாரத்தில் அடுத்த தவணையை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளது. இருப்பினும், இ-கே.ஒய்.சி மற்றும் வங்கி இணைப்புக் காரணங்களால் பல விவசாயிகள் ரூ. 2,000 பலனைத் தவறவிட நேரிடலாம்.
பி.எம் கிசான் 21வது தவணை தகவல்: அடுத்த தவணையை அரசு எப்போது வழங்கும் - எந்தப் பயனாளிகளுக்குப் பலன்கள் கிடைக்காது
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகைக்கு முன்பே அரசு அடுத்த தவணையான ரூ.2,000-ஐ வெளியிடும், இது தங்கள் வீடுகளில் பண்டிகை உற்சாகத்தைச் சேர்க்கும் என்று அவர்கள் நம்பினர்.
எனினும், அரசு தீபாவளி அன்று தவணையை வெளியிடாது என்றும், அடுத்த தவணை நவம்பர் முதல் வாரத்தில் செலுத்தப்படும் என்றும் இப்போது தெரிய வந்துள்ளது.
பீகார் தேர்தலுக்கு முன் அறிவிப்பு வரலாம்
தகவல்களின்படி, மத்திய அரசு நவம்பர் முதல் வாரத்தில் 21வது தவணையை அறிவிக்கலாம். பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பு வரலாம் என்று நம்பப்படுகிறது.
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால் பணம் பி.எம் கிசான் நிதி வெளியிடுவது குறித்த கேள்விகள்
பீகாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்த காலகட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் புதிய தவணையை அரசு வெளியிட முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி, நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது, ஆனால், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கான கொடுப்பனவுகளைத் தொடர்ந்து வழங்கலாம்.
ஏற்கனவே சில மாநிலங்களில் 21வது தவணை வழங்கப்பட்டுள்ளது
சில மாநிலங்களில் மத்திய அரசு ஏற்கனவே 21வது தவணையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 26, 2025 அன்று, மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச விவசாயிகளுக்கு இந்தத் தவணையை வெளியிட்டார். சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைக் கருத்தில் கொண்டு இந்த மாநில விவசாயிகளுக்கு முன்கூட்டியே நிவாரணம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, அக்டோபர் 7 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் விவசாயிகளும் இந்தத் தவணைப் பலனைப் பெற்றனர்.
பி.எம். கிசான் திட்டம் என்றால் என்ன?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டம் பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது — இது ரூ. 2,000 வீதம் மூன்று சம தவணைகளாக நேரடிப் பணப் பரிமாற்றம் (டி.பி.டி) மூலம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாயத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 20வது தவணை ஆகஸ்ட் 2025-ல் வெளியிடப்பட்டது, இதன் மூலம் 85 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்தனர்.
யாருக்குப் பலன் கிடைக்காது?
பலனைப் பெறுவது குறித்து 2019-ம் ஆண்டில் பி.எம். கிசான் திட்டத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அரசு பிப்ரவரி 1, 2019 ஐக் காலக்கெடுவாக நிர்ணயித்தது. இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு புதிய விவசாய நிலத்தை வாங்கிய அல்லது பெற்ற விவசாயிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பி.எம் கிசான் பணம் செலுத்தத் தகுதியற்றவர்கள். நிலத்தின் உரிமையாளர் இறந்த பிறகு வாரிசுரிமை மூலம் நிலம் பெறப்பட்டால் மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், தங்கள் இ-கே.ஒய்.சி (eKYC) முடிக்காத அல்லது வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படாத விவசாயிகளுக்கு இந்தத் தவணை கிடைக்காது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இ-கே.ஒய்.சி (eKYC) செய்வது எப்படி?
விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் OTP அடிப்படையிலான இ-கே.ஒய்.சி (eKYC) செய்யலாம்.
அருகில் உள்ள பொதுச் சேவை மையத்திற்கு (CSC) செல்வதன் மூலம் பயோமெட்ரிக் இ-கே.ஒய்.சி (eKYC) செய்யலாம்.
மொபைல் செயலி வழியாக முக அங்கீகாரம் (face authentication) மூலமாகவும் இ-கே.ஒய்.சி (eKYC)சாத்தியமாகும்.
உங்கள் தவணை நிலையைச் சரிபார்ப்பது எப்படி?
அதிகாரப்பூர்வ பி.எம் கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.
‘பயனாளி நிலை’ (Beneficiary Status) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிடவும்.
‘தரவைப் பெறுக’ (Get Data) என்பதைக் கிளிக் செய்யவும். தவணை நிலை திரையில் காட்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us