Advertisment

நல்ல செய்தி: பிஎம்-கிஸான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ப்ளஸ் நன்மைகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM-Kisan, பிஎம்-கிஸான், Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana, PM Kisan Mandhan Yojana

PM-Kisan, பிஎம்-கிஸான், Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana, PM Kisan Mandhan Yojana

மோடி அரசால் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட மிகப் பெரிய திட்டங்களில் பிஎம்-கிஸான் என்று பரவலாக அழைக்கப்படுகிற Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டமும் ஒன்றாகும். இதுவரை ஏறத்தாழ ரூபாய் 75000 கோடியை அரசு PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் கீழ் செலவழித்துள்ளது. இந்த அரசாங்க திட்டத்தின் பயன்களை 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பெறுகின்றனர். பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூபாய் 6,000/- மூன்று தவனைகளாக வழங்கப்படுகிறது.

Advertisment

ஆண்டுக்கு ரூபாய் 6,000/- நிதி உதவி தவிர, பலருக்கும் தெரியாத வேறு மூன்று நன்மைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த மூன்று நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேசிசி கிஸான் கடன் அட்டை (KCC-kisan credit card)

PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தில் கிஸான் கடன் அட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். கே.சி.சி.யை உருவாக்கும் செயல்முறை விவசாயிகளுக்கு எளிதாகவும் வேகமாகவும் மாறும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விவசாய தேவைகளுக்காக பிஎம்-கிஸான் பயனாளிகள் கிஸான் கடன் அட்டையை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். தற்போது சுமார் 7 கோடி விவசாயிகளிடம் கிஸான் கடன் அட்டை உள்ளது. ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள கடனை 4 சதவிகிதத்திற்கு வழங்குவதற்காக ஒரு கோடி மக்களை மேலும் சேர்க்க அரசாங்கம் விரும்புகிறது.

PM Kisan Maandhan Yojana

ஒரு விவசாயி PM-Kisan Samman Nidhi திட்டத்தில் பயன்களை அனுபவித்தால், அவர் PM Kisan Mandhan Yojana திட்டத்திற்கு வேறு ஆவணங்கள் எதையும் வழங்கவேண்டியதில்லை. PM Kisan Mandhan திட்டம் என்பது நாட்டில் உள்ள விவசாயிகளுக்கான ஒரு ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், பிஎம் கிஸான் திட்டத்திலிருந்து பெறப்படும் சலுகைகளிலிருந்து விவசாயிகள் நேரடியாக பங்களிக்க செய்வதை தேர்வு செய்யலாம். ரூபாய் 6,000/- திலிருந்து பிரீமியம் தொகை எடுத்துக் கொள்ளப்படும்.

கிஸான் அட்டையை தயாரிப்பதற்கான திட்டம் (Plan to make Kisan card)

PM Kisan Samman Nidhi Yojana திட்டத்திலுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான உழவர் அடையாள அட்டையை விவசாயிகளுக்காக தயாரிக்க மோடி அரசு தயாராகிவருகிறது. பிஎம் கிஸான் மற்றும் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட நில பதிவுகள் தரவுத்தளத்தை (database) இந்த உழவர் அடையாள அட்டையுடன் இணைக்க திட்டங்கள் உள்ளன. இந்த அட்டை தயாரிக்கப்பட்டதும், விவசாயம் தொடர்பான திட்டங்களை விவசாயிகளுக்கு அனுப்புவது எளிதாக இருக்கும்.

விரைவான சரிபார்ப்பு செயல்முறை (Faster Verification process)

இந்த திட்டத்தின் மூலம் அதிகப்படியான விவசாயிகள் பயன்பெற வேண்டும் என அரசு விரும்புகிறது எனவே சரிபார்ப்பு செயல்முறையை மாவட்ட அளவில் விரைவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment