பிஎம் கிசான் 10-வது தவணை கிடைக்கவில்லையா? என்ன செய்வது?

பிஎம் கிசான் திட்டம்; பயனாளி நிலை மற்றும் 10-வது தவணை கிடைத்துள்ளதை தெரிந்துக்கொள்வது எப்படி?

பிஎம் கிசான் 10-வது தவணை கிடைக்கவில்லையா? என்ன செய்வது?

PM Kisan Beneficiary status, 10th instalment check simple steps here: பிஎம் கிசான் பற்றிய தகவல்களையும், இத்திட்டத்தின் 10 ஆவது தவணை கிடைக்கப்பெறாதவர்களுக்கு அதற்கான காரணம் மற்றும் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்த முக்கிய தகவல்களையும் இப்போது பார்ப்போம்.

விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணப் பலன்களை மாற்றும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 2018 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது வரை 10 தவணைகள் மூலம் நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு விவசாயியும் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு மத்திய அரசால் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணையில் ரூ. 2000 வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10 ஆவது தவணை ஜனவரி 1, 2022 அன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும் சில விவசாயிகளுக்கு தவணை தொகையானது தாமதமாக கிடைத்தது. ஆனால், சிலருக்கு இதுவரை தவணைத் தொகை கிடைக்கவில்லை. இதற்கு காரணம் உங்களது ஆதார் விவரங்களை உங்களின் பிஎம் கிசான் கணக்குடன் இணைப்படாமல் இருப்பதாகும். எனவே உங்களுக்கு இந்த திட்டத்தின் தவணை தொகை தடை இல்லாமல் கிடைக்க ஆதார் விவரங்களை பிஎம் கிசான் கணக்குடன் இணைப்பது அவசியமாகும்.

விவசாயிகள் பிஎம் கிசான் தவணை நிலை குறித்த தகவல்களை நேரடியாகத் தங்கள் மொபைலில் பெறலாம், மேலும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in மூலமும் தெரிந்துக் கொள்ளலாம்.

பிஎம் கிசான் 10வது தவணை நிலையைச் சரிபார்ப்பது எப்படி?

PM கிசான் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரும்போது, ​​வங்கி மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது, இதன் மூலம் உங்கள் கணக்கில் PM Kisan தவணை செலுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு குறுஞ்செய்தி வராவிட்டால், அல்லது உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாவிட்டால் நீங்கள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் உங்கள் பயனாளி நிலையை அதாவது உங்களுக்கு தவணை தொகை கிடைக்கப்பெறுமா என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

முதலில் நீங்கள் PM Kisan இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in க்கு செல்ல வேண்டும்.

நீங்கள் இணையதளத்திற்குச் சென்றவுடன், முகப்புப் பக்கத்தில் விவசாயிகள் கார்னர் விருப்பத்தைக் காண்பீர்கள், அதன் கீழ் பயனாளி நிலை என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பயனாளியின் நிலை என்ற விருப்பத்தை கிளிக் செய்யும்போது, ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும்.

இங்கே நீங்கள் ஆதார் எண், கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு, டேட்டாவைப் பெறு என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

பிஎம் கிசான் பயனாளியின் நிலைத் தகவலுக்கான முன்பக்கத்தில் டேட்டாவைப் பெறு பொத்தான் திறக்கும், மேலும் இங்கே உங்கள் பயனாளி நிலை, PM கிசான் 10வது தவணை நிலை, உங்கள் கணக்கில் விவரங்கள் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.

பயனாளி நிலையில் உங்கள் விவரங்கள் சரியாக இருந்தும் உங்களுக்கு தவணை தொகை கிடைக்கவில்லை என்றால், உங்கள் வங்கி கணக்கு நிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வங்கி கணக்குடன் ஆதார் விவரங்கள் இணைக்கப்படாவிட்டாலும், உங்களுக்கு தவணை கிடைக்காது. எனவே உடனே ஆதார் விவரங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை எல்லாம் சரியாக இருந்தால், உங்களுக்கு தவணை கிடைக்காதது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Pm kisan beneficiary status 10th instalment check simple steps here