பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி திட்டம் குறித்த தகவல்களை செல்போன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம்.
பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் பிரித்து வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை விவசாயிகள் இணையதளத்தை சென்றே அறிந்துகொள்ளும் வசதி இருந்தது.
இந்த நிலையில் செல்போன் மூலமாகவே திட்டத்தை அறிந்துகொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி,விவசாயிகள் தங்களது விண்ணப்ப நிலை, வங்கி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ள போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். PM கிசான் பயனாளிகள் ஆன்லைனில் பதிவு/மொபைல் எண் மூலம் சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்.
முதலில், pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும். பின்னர், Beneficiary Status என்பதை கிளிக் செய்யவும். தொடர்ந்து, பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும். இதையடுத்து, image text or captch எது தோன்றுகிறதோ அதனை பட குறியீட்டு பெட்டியில் பதிவிடவும். பின்னர் ‘தரவைப் பெறு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஒரு நிதியாண்டில், PM கிசான் தவணை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 3 முறை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஏப்ரல்-ஜூலை வரை முதல் தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலம் இரண்டாவது தவணை மற்றும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலானது 3வது தவணைக்கான காலமாக கணக்கிடப்படுகிறது.
நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ttps://t.me/ietamil"