Advertisment

பிஎம் கிசான் நிதியுதவி திட்டம்; விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

பிஎம் கிசான் திட்டம்; 11 –வது தவணை எப்போது? தவணைத் தொகை சிக்கல் இல்லாமல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

author-image
WebDesk
New Update
பிஎம் கிசான் 11-வது தவணை; விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட் இதோ…

PM Kisan eKYC process and 11th instalment details: பிஎம் கிசான் திட்ட விவசாய பயனாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி. கட்டாய eKYC செயல்முறையை முடிப்பதற்கான காலகெடுவை மே 22, 2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Advertisment

பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) ஆனது, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை மூன்று சம தவணைகளாக, அதாவது தவணைக்கு ரூ.2000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணை ஏப்ரல் 2022 இல் வெளியிடப்படும்.

இதனிடையே பிஎம் கிசான் பயனாளிகள் கட்டாயம் eKYC செயல்முறையை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அடுத்த தவணை தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. eKYC செயல்முறைக்கு மார்ச் 31 ஆம் தேதி இறுதி காலக்கெடுவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், PM கிசான் இணையதளத்தில், "அனைத்து PM-KISAN பயனாளிகளுக்கும் eKYC இன் காலக்கெடு 22 மே 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஃபிக்ஸிட் டெபாசிட்; முதலீடு செய்யும் முன் இந்த 5 விஷயங்கள் முக்கியம்!

eKYC செயல்முறையை எவ்வாறு செய்வது என்பது இங்கே.

படி 1: PM கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்குச் செல்லவும் - https://pmkisan.gov.in/

படி 2: முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில், eKYC விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்யவும்

படி 4: உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

படி 5: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.

eKYC வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட உங்கள் எல்லா விவரங்களும் பொருந்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் உள்ளூர் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும்.

குறிப்பிடத்தக்க வகையில், விவசாயிகள் தங்கள் KYC சரிபார்ப்பைப் பெறுவதற்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று அவர்களின் ஆதார் அட்டையைக் காண்பிப்பதன் மூலம் eKYC ஆஃப்லைனில் செய்ய முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pm Kisan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment