நாட்டின் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1998 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், விவசாயம் தொடர்பான பணிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், குத்தகை விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் விவசாயத்துடன் தொடர்புடையவரக இருக்க வேண்டும். இதற்கு 18 முதல் 75 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிக்கு, இணை விண்ணப்பதாரர் இருப்பது அவசியம்.
இதில் விவசாயத்துக்காக ரூ.3 லட்சம் வரையில் கடன் வாங்கலாம். அதுவும் மிகக் குறைந்த வட்டியில். ஐந்து ஆண்டுகளுக்கு இதில் கடன் கிடைக்கும். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்குக் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்கு இத்திட்டம் உதவும்.
கிசான் கிரெடிட் கார்டு மூலமாகக் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு 2 சதவீத வட்டிச் சலுகை வழங்குகிறது. பொதுவாக இத்திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டிதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், சரியான சமயத்தில் திருப்பிச் செலுத்தினால் 4 சதவீத வட்டியில் வாங்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து விண்ண்ப்பித்து வாங்கலாம். https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். SBI YONO app மூலமும் விண்ணப்பிக்கலாம்.
கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பிஎன்பி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி… அதாவது எந்த வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கும் செல்லுங்கள்.
KCC க்கு விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்க.
KCC படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யுங்கள்.
இந்த படிவத்தை வங்கியின் அருகிலுள்ள கிளைக்கு சமர்ப்பிக்கவும்.
கடன் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்வார்.
பயன்பாட்டு குறிப்பு எண்ணைச் சேமிக்கவும்.
கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு அனுப்பப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil