Advertisment

PM KISAN: பிஎம் கிசான் 10-வது தவணை ஜனவரி 1-ம் தேதி; பட்டியலில் உங்கள் பெயரை ’செக்’ செய்துவிட்டீர்களா?

பிஎம் கிசான் திட்டத்தின் 10 ஆவது தவணை ஜனவரி 1ல் கிடைக்கும். உங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி?

author-image
WebDesk
New Update
பிஎம் கிசான் 11-வது தவணை; விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட் இதோ…

PM Kisan How to check Beneficiary status in tamil: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) 10வது தவணையை எதிர்நோக்கி லட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். PM KISAN பணம் வழங்கப்படும் தேதி குறித்து டிசம்பர் மாதத்தில் பல தேதிகள் ஊகிக்கப்பட்டாலும், 10வது தவணை ஜனவரி 1ம் தேதி கிடைக்கும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

PM KISAN திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளின் கணக்குகளுக்கு ஜனவரி 1, 2022 அன்று ரூ.2,000 மாற்றப்படும் என்று மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விவசாயிகளுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த தவணையை 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்றும், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு சமபங்கு மானியம் வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டமானது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் ரொக்கப் பரிமாற்றத்தை மூன்று சம தவணைகளில் வழங்குகிறது. முதல் தவணை ஏப்ரல்-ஜூலை இடையே வழங்கப்படுகிறது, இரண்டாவது தவணை ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் மூன்றாவது தவணை டிசம்பர்-மார்ச் இடையே வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி?

pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையவும்

வலதுபுறம், நீங்கள் விவசாயிகள் கார்னர் பார்ப்பீர்கள்

விவசாயிகள் கார்னரைக் கிளிக் செய்யவும்

இப்போது விருப்பத்திலிருந்து, பயனாளி நிலை என்பதைக் கிளிக் செய்யவும்

உங்கள் நிலையைப் பார்க்க, உங்கள் ஆதார் எண், வங்கிக் கணக்கு மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற சில விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும்.

மேலே உள்ள நடைமுறையை நீங்கள் முடித்த பிறகு, பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் அது காண்பிக்கப்படும்.

மொபைல் ஆப் மூலம் PM KISAN இல் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம்?

மொபைல் ஆப் மூலம் உங்கள் பெயரைச் சரிபார்க்க, நீங்கள் முதலில் PM Kisan மொபைல் செயலியைப் பதிவிறக்க வேண்டும். நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கி, உங்கள் விவரங்களை உள்ளிட்டவுடன் அனைத்து விவரங்களையும் அணுகலாம்.

PM-KISAN திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டும்தானா?

PM-KISAN திட்டம் தொடங்கப்பட்ட தொடக்கத்தில் (பிப்ரவரி, 2019), அதன் பலன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 2 ஹெக்டேர் வரையிலான நில வரம்பு இருந்தது. இந்தத் திட்டம் பின்னர் ஜூன் 2019 இல் திருத்தப்பட்டது. அப்போது இந்த திட்டம் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் அவர்களின் நிலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் விரிவுபடுத்தப்பட்டது.

PM-KISAN திட்டத்தின் பயன்கள் யாருக்கு கிடைக்காது?

நிறுவன நிலம் வைத்திருப்பவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாய குடும்பங்கள், பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் ஆகியோக்கு பிஎம் கிசான் நிதியுதவி கிடைக்காது. மேலும், டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் 10,000 ரூபாய்க்கு மேல் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களும் பிஎம் கிசான் பலன்களுக்கு தகுதியற்றவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pm Kisan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment