pm kisan latest tamil news, pm kissan.gov.in, pm kisan-gov-in, pm kisan scheme, கிஸான் கார்டு, கிசான் கார்ட் விவசாயக் கடன்
PM Kisan Credit Card Apply Online: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அல்லது கோவிட் -19 தொற்று நோயின் காரணமாக ஒட்டு மொத்த நாடும் தற்போது ஊரடங்கில் உள்ளது. இந்த ஊரடங்கின் மிகப்பெரிய தாக்கம் சாதாரண மக்களிடம் மட்டுமல்ல விவசாயிகளிடமும் இருக்கும். எனவே இந்த கடினமான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாத்தியமான ஒவ்வொரு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
Advertisment
சமீபத்தில் Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana (PM-Kisan) பயனாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்க மத்திய அரசு அறிவித்தது. PM-Kisan திட்டத்தின் கீழ் பயன்பெறும் சுமார் 14 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடன் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும். இதற்கு மேல் ஒரு விவசாயிக்கு கடன் தேவைப்பட்டால் அவர் ஒரு பத்திரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
pm kisan scheme: ரூ 3 லட்சம் வரை விவசாய கடன்
சாகுபடிக்காக நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 1.60 லட்சம் வரையிலான விவசாய கடன் எந்தவித உத்தரவாதமும் இன்றி கிடைக்கும். முன்பு இதற்கான உச்சபட்ச வரம்பு ரூபாய் ஒரு லட்சமாக இருந்தது. அரசு இந்த கடன் பெறுவதற்கான செயல்முறையையும் விவசாயிகளின் வசதிக்காக எளிதாக்கியுள்ளது. விவசாயிகள் இந்த கடனை கிஸான் கடன் அட்டையின் மூலம் பெறுவார்கள் என மத்திய வேளான்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி தெரிவித்துள்ளார். அரசு எந்தவித உத்தரவாதமும் இன்றி இந்த கடனை வழங்குகிறது எனவே விவசாயிகள் தனியார் வங்கி அல்லது கடன் கொடுப்பவர்களிடமிருந்து வாங்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை திரும்ப செலுத்தினால் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் வரை கடன் 4 சதவிகித வட்டியில் கிடைக்கும். கடனுக்கான விண்ணப்பம் சமர்பித்த 15 நாட்களுக்குள் கிஸான் கடன் அட்டையை வழங்க வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கிஸான் கடன் அட்டைக்காக வங்கிகளின் அனைத்து செயலாக்க கட்டணங்களையும் அரசு ரத்து செய்துள்ளது. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வள விவசாயிகளுக்கும் இந்த வசதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
kisan credit card apply online: கிஸான் கடன் அட்டை எவ்வாறு விண்ணப்பிப்பது ?
உங்கள் வங்கியின் இணையதளத்தில் கிஸான் கடன் அட்டை பகுதிக்கு செல்லவும்.
"Apply Now" என்பதை சொடுக்கவும்.
உங்களது அனைத்து விவரங்களையும் நிரப்பவும். நிரப்பிய அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ளவு.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ’சமர்பி’ பொத்தானை சொடுக்கவும்
மூன்று முதல் நான்கு வேலை நாட்களில் விண்ணப்பம் செயலாக்கப்படும்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வங்கி அதிகாரி உங்களை தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்கள் மற்றும் அடுத்து செய்ய வேண்டியதை தெரிவிப்பார்.
Offline மூலமாக கிஸான் கடன் அட்டை கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?
Offline மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று கிஸான் கடன் அட்டை கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவு செய்யும் போது தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
உங்கள் கைபேசி எண்ணை விண்ணப்பத்தில் கொடுப்பதன் மூலம் கடன் தொடர்புடைய அனைத்து நிலை தகவல்களையும் பெற முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"