Advertisment

மாதம் ரூ.100 முதலீட்டில் ரூ.3000 வருமானம்; விவசாயிகளுக்கான சிறந்த ஓய்வூதிய திட்டம்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) ஓய்வூதியம் மூலம் சமூக பாதுகாப்பை வழங்கும் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜ்னா (PMKMY) திட்டம் பற்றிய முழுத் தகவல்கள் இங்கே

author-image
WebDesk
Jan 31, 2022 15:44 IST
New Update
பிஎம் கிசான் 11-வது தவணை; விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட் இதோ…

PM Kisan man dhan Yojana assures Rs.3000 pension for farmers: பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜ்னா (PMKMY) திட்டம் என்பது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) ஓய்வூதியம் மூலம் சமூக பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் விவசாயிகளின் முதுமை காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும், குறைந்தபட்ச சேமிப்பு அல்லது சேமிப்பு இல்லாததன் காரணமாக வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவும் திட்டமாகும்.

Advertisment

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 60 வயது நிறைவடைந்தவுடன், சில விலக்கு விதிகளுக்கு உட்பட்டு, குறைந்தபட்ச நிலையான ஓய்வூதியம் மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், இதில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். இத்திட்டம் ஆகஸ்ட் 9, 2019 அன்று செயல்படுத்தப்பட்டது.

பயனாளி 29 வயதுடைய சராசரி நுழைவு வயதில் மாதம் ரூ.100 பங்களிக்க வேண்டும். மத்திய அரசும் ஓய்வூதிய நிதிக்கு சமமான தொகையை அளிக்கும். மேலும் பதிவு செய்த விவசாயிகள் 60 வயதை அடைந்தவுடன், குறைந்தபட்ச நிலையான ஓய்வூதியமாக மாதம் ரூ 3000 அவர்களுக்கு கிடைக்கும். எனவே, இத்திட்டத்தின் பலன்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கும்.

நன்மைகள்

விவசாயிகளுக்கு வருமானம் மற்றும் ஆதரவு விலைக்கான தொடர் தலையீடுகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், முதுமையால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்பதால், விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. விவசாயத்திற்கு வயல்களில் கடின உழைப்பு தேவைப்படுகிறது, இது வயதான காலத்தில் கடினமாகிறது.

மேலும், சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் முதுமையில் குறைந்தபட்ச சேமிப்பு அல்லது சேமிப்பு இல்லாததால், அவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு, பிரதான் மந்திரி கிசான் மான்-தன் யோஜனா 60 வயதை எட்டும்போது, ​​ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும், அனைத்து நிலத்தை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMFs) உறுதிசெய்யப்பட்ட மாதாந்திர ஓய்வூதியமாக ரூ 3000 வழங்குகிறது. இருப்பினும், விலக்கு அளவுகோலின் வரம்பிற்குள் வரும் விவசாயிகள் பலன் பெற தகுதியற்றவர்கள்.

தகுதிகள்

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகள் (SMFs), 18 வயது மற்றும் அதற்கு மேல் மற்றும் 40 வயது வரை உள்ளவர்கள் மற்றும் விலக்கு அளவுகோலின் வரம்புக்குள் வராதவர்கள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள, இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம் அதன் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Business #Pm Kisan #Best Investment Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment