PM Kisan Samman Nidhi : இந்தியாவில் உள்ள 125 மில்லியன் விவசாயிகள் பயனடைகின்ற வகையில் மத்திய அரசு அறிவித்த திட்டம் தான் பிரதம மந்திரி கிஷான் யோஜனா. 2018ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ரூ. 6000 வரை நிதி உதவிகள் பெற முடியும்.
நீங்கள் விவசாயியாக இருந்தால் இந்த நிதியை நீங்கள் எப்படி பெறுவது என்பதை இங்கே காணலாம்.
முதலில் பி.எம். கிஷான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையமான pmkisan.gov.in-க்கு செல்லுங்கள்.
அங்கே பயனர்களின் நிலை (Beneficiary Status) என்ற ஆப்சனை ஃபார்மர்ஸ் கார்னர் (Farmers Corner) என்ற பிரிவில் தேர்வு செய்யவும்.
ஆதார் அட்டை, வங்கி கணக்கு அட்டை அல்லது தொலைபேசி எண் என மூன்றில் ஏதாவது ஒன்றை உள்ளீடாக கொடுத்து உள்ளே நுழையவும். இந்த எண்களை வைத்து உங்களுக்கு தவணை வழங்கப்பட்டுவிட்டதா என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.
இந்த எண்களை உள்ளீடாக கொடுத்தால் உங்களுக்கு இதுநாள் வரையில் வழங்கப்பட்டிருக்கும் தவணைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் வழங்கப்படும். கூடுதலாக 8வது தவணை எப்போது வழங்கப்படும் என்ற தகவல்களும் அந்த இணையத்தில் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய மத்திய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருத்தல் அல்லது உரிமையைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது.
திட்ட வழிகாட்டுதல்களின்படி ஆதரவுக்கு தகுதியான உழவர் குடும்பங்களை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதியை மாற்றும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil