PM-KISAN Samman Nidhi beneficiary list: பிரதமர் நரேந்திர மோடியால், 2019 இல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் பி.எம். கிஷான் திட்டம் தொடங்கப்பட்டது.
PM-KISAN திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி ஊக்கத்தொகை கிடைக்கும். இந்தத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மூன்று சம தவணைகளாக ரூ.2,000 ஆக நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
தற்போது விவசாயிகள் 12ஆவது தவணைக்காக காத்திருக்கின்றனர்.
PM-KISAN சம்மன் நிதி பயனாளிகள் பட்டியல்: எப்படி சரிபார்க்க வேண்டும்
Step 1: : PM-கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ pmkisan.gov.in. வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
Step 2: விவசாயிகளின் 'பயனாளிகள் பட்டியல்' என்பதைக் கிளிக் செய்யவும். மாற்றாக, https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx என்ற லிங்க் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Step 3: நீங்கள் உங்களின் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 4: இப்போது 'Get report' டேப்பில் கிளிக் செய்யவும்.
Step 5: பயனாளியின் விவரங்கள் கணினி திரையில் காட்டப்படும். பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்கவும்.
PM-KISAN சம்மன் நிதி விண்ணப்ப நிலையை சரிபார்த்தல் உதவி
விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்க வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் உதவி (ஹெல்ப்லைன்) எண்ணைத் தொடங்கியுள்ளது.
விவசாயிகள் தங்கள் PM-KISAN சம்மன் நிதியின் நிலையை அறிய 155261 என்ற எண்ணில் அழைக்கலாம்.
PM-KISAN திட்டத்தின் அம்சங்கள்
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் வீட்டுத் தேவைகள் தொடர்பான செலவுகளை கவனித்துக்கொள்வதற்காக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குடும்பங்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில்
பயனாளிகளின் ஆதார் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.