scorecardresearch

விவசாயிகள் வங்கி அக்கவுண்டில் ரூ.2000: அடுத்த தவணை ரெடி; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

PM-KISAN திட்டத்தின் ஒரு பகுதியாக, தகுதியான விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் கிடைக்கும்.

PM Kisan Samman Nidhi Yojana 14th Installment Likely To Be Released Soon
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 14வது தவணைக்காக விவசாய பயனாளிகள் காத்திருக்கின்றனர்.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 14வது தவணைக்காக விவசாய பயனாளிகள் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் 14ஆவது தவணை தொகையை பிரதமர் பிப்ரவரி மாதம் விடுவித்தார்.
இந்நிலையில் 14ஆவது தவணையை இம்மாதம் விடுவிக்க உள்ளார். இதற்கிடையில், 14வது தவணை அடுத்த சில வாரங்களில் விடுவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் http://www.pmkisan.gov.in இல் உள்நுழைந்து, ‘Farmer’s corner’ என்பதைச் சரிபார்க்கவும்.
தொடர்ந்து, ‘புதிய விவசாயி பதிவு’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
பின்னர் விவரங்களை உள்ளிட்டு ‘ஆம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு, PM-Kisan விண்ணப்பப் படிவம் 2023 இல் கேட்கப்பட்ட தகவலை நீங்கள் கொடுக்க வேண்டும்.

பயனாளிகள் பட்டியலை பார்ப்பது எப்படி?

இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் விவரங்களை அறிய முதலில் PM Kisan அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.pmkisan.gov.in சென்று பார்வையிடவும்.
பின்னர் பக்கத்தின் வலது மூலையில் உள்ள ‘பயனாளிகள் பட்டியல்’ தாவலைக் கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து, துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் ‘Get report’ டேப்பில் கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம், பயனாளிகளின் பட்டியல் விவரம் திரையில் காட்டப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Pm kisan samman nidhi yojana 14th installment likely to be released soon