PM Kisan Samman Nidhi Yojana : பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நிலம் வைத்திரக்கும் தகுதியுள்ள விவசாயிகள் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழக்கப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒவ்வொரு 2,000 ரூபாய் வீதம் ஒரு வருடத்தில மூன்று சம தவணைகளில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
அதன்படி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM KISAN) யோஜனா திட்டத்தின் வழங்கப்படும் நிதியின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ஆனால் 11வது தவணை வழங்கப்படும் தேதி குறித்து இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை.
பிஐபி இந்தியா (PIB India) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ட்வீட் படி, கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi) திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் அடுத்த தவணையைப் பெற, தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் கேஒய்சி (KYC)-ஐ ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தி புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் இணையதளத்தின்படி, பிஎம் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு இ-கேஒய்சி (eKYC) கட்டாயமாகும். ஆதார் அடிப்படையிலான ஒடிபி (OTP) அங்கீகாரத்திற்காக உழவர் இ-கேஒய்சி (eKYC) விருப்பத்தைக் கிளிக் செய்யவும் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு அருகிலுள்ள சிஎஸ்சி (CSC) மையங்களைத் தொடர்பு கொள்ளவும்.
இது குறித:து உடய், (“UIDAI) வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடய்- இன் ஒடிபி (OTP) சேவைகளில் இடைப்பட்ட சிக்கல் காரணமாக ஒடிபி சரிபார்க்கும் போது பதில் தாமதம் ஏற்படலாம். என்று கூறியுள்ளது.
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா இகேஒய்சி-ஐ ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?
பிஎம் கிசானின் (PM-Kisan) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
முதல் பக்கத்தின் வலது பக்கத்தில் கிடைக்கும் இகேஒய்சி (eKYC) விருப்பத்தை கிளிக் செய்யவும்
அடுத்து ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை (Search) கிளிக் செய்யவும்
அடுத்து ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்
அதன்பிறகு கெட் ஒடிபி (‘Get OTP’) என்பதைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட புலத்தில் ஒடிபி-ஐ உள்ளிடவும்
பிஎம் கிசான்
பிஎம் கிசான் என்பது முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட மத்தியத் துறை முயற்சியாகும். நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் மூன்று சம தவணைகளில் ரூ.6,000/- ஆண்டு வருமான ஆதரவைப் பெறுவார்கள். இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாநில அரசும் யூனியன் பிரதேச நிர்வாகமும் உதவி பெற தகுதியுள்ள விவசாய குடும்பங்களை அடையாளம் காணும்.
பிஎம் கிசான் பயனாளி நிலையை எப்படி பெறுவது?
பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனருன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்- (pmkisan.gov.in)
அதில் ‘பயனாளி நிலை’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அடுத்து ஆதார் எண், கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன்பிறகு ‘தரவைப் பெறு’ (Get Data) என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்து ஸ்கிரீனில் பயனாளியின் தரவு தெரியும்.
பிஎம் கிசான் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற முடியாதவர்கள் யார்?
• அனைத்து நிறுவன நில உரிமையாளர்கள்.
• பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த விவசாயி குடும்பங்கள்:
• முன்னாள் மற்றும் தற்போது அரசியலமைப்பு பதவிகளை வைத்திருப்பவர்கள்
முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள்/ மாநில அமைச்சர்கள் மற்றும் லோக்சபா/ ராஜ்யசபா/ மாநில சட்டப் பேரவைகள்/ மாநில சட்டப் பேரவைகளின் முன்னாள்/தற்போதைய உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய மாநகராட்சி மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள்.
மத்திய/மாநில அரசு அமைச்சகங்கள்/அலுவலகங்கள்/துறைகள் மற்றும் அதன் களப் பிரிவுகளான மத்திய அல்லது மாநில அரசாங்கத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகங்கள்/தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழக்கமான பணியாளர்கள் என அனைத்து பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.
(மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் / வகுப்பு IV/குரூப் D பணியாளர்கள் தவிர)
மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 10,000/- அல்லது அதற்கு மேல் உள்ள அனைத்து ஓய்வுபெற்ற/ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்
கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய அனைத்து நபர்களும், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற வல்லுநர்கள், தொழில்முறை அமைப்புகளுடன் பதிவுசெய்து, நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலம் தொழிலை மேற்கொள்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil