பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய் என ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரையில் எட்டு தவணைகளாகப் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பதாவது தவணைப் பணம் இன்னும் ஓரிரு மாதங்களில் வழங்கப்படவுள்ளது.
இருப்பினும், இந்த திட்டம் தொடர்பாக மக்களின் மனதில் சில கேள்வி எழுகிறது. கணவன்-மனைவி இருவரும் இந்த திட்டத்தின் பலனை ஒன்றாகப் பெற முடியுமா?
இந்த திட்டத்தின் விதிகளின்படி, PM-KSNY விவசாயிகளின் குடும்பங்களுக்கானது.
பிஎம் கிசான் திட்டத்தின் நன்மை யாருக்கு கிடைக்கும்?
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை கணவன்-மனைவி இருவரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்தியாவில் குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் இரண்டு மைனர் குழந்தைகள் என்று பொருள். திட்டத்தின் விதிப்படி, குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே அதன் பயனைப் பெற முடியும்.
கணவன்-மனைவி தனித்தனியாக இத்திட்டத்தைப் பெற முயற்சித்தால், திட்டத்தின் தவணையை அவர்களிடமிருந்து வசூலிக்க முடியும். உண்மையில், இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அங்கு விவசாயி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் நன்மைகள் வழங்கப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு இடமில்லை. இதுபோன்ற ஏதேனும் ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததும், அவர்கள் அடையாளம் காணப்பட்டு இந்த திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இது தவிர, இதுபோன்ற பல விதிகள் விவசாயிகளை தகுதியற்றவர்களாக ஆக்குகின்றன. விவசாயி குடும்பத்தில் யாராவது வரி செலுத்தினால், இந்த திட்டத்தின் பயன் கிடைக்காது. அதாவது, வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தியிருந்தால், அவர்களுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.
திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் யார்?
ஒரு விவசாயி தனது விவசாய நிலத்தை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தவில்லை, ஆனால் வேறு நோக்கங்களுக்காக அல்லது மற்றவர்களின் வயல்களில் விவசாய வேலைகளை செய்கிறான் என்றால், அத்தகைய விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள உரிமை இல்லை. சம்பந்தப்பட்ட விவசாயி விவசாயம் செய்தாலும் வயல் அவரது பெயரில் இல்லாமல் தந்தை அல்லது தாத்தாவின் பெயரில் இருந்தாலும் இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது.
ஒருவர் விவசாய நிலத்தின் உரிமையாளராக இருந்தாலும் அவர் ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வு பெற்றவர், எம்பி அல்லது முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ, அமைச்சர் என்றால், அத்தகையவர்களும் உழவர் திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற தகுதியற்றவர்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள். வருமான வரி செலுத்தும் குடும்பங்களுக்கும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.
PM-KSNY9 வது தவணை தேதி
பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் PM-KSNY9வது தவணையை அடுத்த மாதம், அதாவது ஆகஸ்டில் அரசு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.