இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான ஒரு நல்ல செய்தி இது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவுக்கு இதுவரை பதிவு செய்யாத விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.
பிரதம மந்திரி கிசான் திட்டம் என்பது நாடு முழுவதுமுள்ள சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வழங்கும் திட்டமாகும். இது ஒரு தவணைக்கு ரூ. 2000 என ஆண்டுக்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் இதுவரை, ஒரு விவசாயி எட்டு தவணைகளில் மொத்தம் ரூ .16,000 பெற்றுள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் எட்டாவது தவணை சமீபத்தில் பிரதமர் மோடியால் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மொத்தத்தில், 9.5 கோடி விவசாயிகளின் கணக்கில் 20 ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
புதிதாக சேரும் விவசாயிகளும் இந்த நன்மைகளைப் பெறலாம். இந்த திட்டத்தில் சேர நீங்கள் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும். மேலும் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் அனைத்து தேவைகளையும் முறையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் நீங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து இந்த திட்டத்தின் பலனை உங்கள் வீட்டிலிருந்தே பெறலாம். இத்திட்டத்திலிருந்து இரட்டை சலுகைகளைப் பெறுவதற்கு, ஒரு விவசாயி ஜூன் 30 க்கு முன் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.
பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கு பதிவு செய்ய https://pmkisan.gov.in/ என்ற வலைதளப்பக்கத்தை பார்வையிடவும்.
இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு இரு மடங்கு சலுகைகள் கிடைக்கும். அதற்கு ஒரு விவசாயி இந்த திட்டத்தின் கீழ் ஜூன் 30 க்கு முன் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு, அவர் பதிவு செய்தால் இந்த திட்டத்தின் இரண்டு தவணைகளின் பலனைப் பெறலாம். ஒரு விவசாயி ஜூன் மாதத்தில் பதிவு செய்தால், ஜூலை மாதத்தில் இந்த திட்டத்தின் முதல் தவணையாக ரூ .2,000 கிடைக்கும்.
பிரதம மந்திரி கிசான் யோஜனாவின், எட்டாவது தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரை வழங்கப்பட்டது. இதன் பின்னர், இந்த திட்டத்தின் ஒன்பதாவது தவணை ஆகஸ்டில் வழங்கப்படும்.
இந்த சூழலில், ஜூன் 30 க்கு முன் பதிவு செய்த விவசாயிக்கு முதல் தவணை ஜூலை மற்றும் இரண்டாவது தவணை ஆகஸ்டில் வழங்கப்படும். இந்த வழியில், இப்போது புதிதாக இந்த திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பதிவு செய்தவுடன் ரூ .4,000 கிடைக்கும். எனவே இது இரட்டை பலனாக அமையும்.
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய மத்திய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருத்தல் அல்லது உரிமையைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது.
திட்ட வழிகாட்டுதல்களின்படி ஆதரவுக்கு தகுதியான உழவர் குடும்பங்களை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதியை மாற்றும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.