Advertisment

பிஎம் கிசான்; மார்ச் 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் 11-வது தவணை கிடைக்காது

பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்தடுத்த தவணைகளை சிக்கல் இன்றி பெற, விவசாய பயனாளிகள் விரைவாக e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
பிஎம் கிசான் 11-வது தவணை; விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட் இதோ…

PM Kisan Scheme: Farmers must complete e-KYC process before March 31: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM KISAN) யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனாளிகள் தங்கள் எதிர்கால தவணைத் தொகைகள் கிடைப்பதை உறுதி செய்ய ஒரு முக்கியமான செயல்முறையை முடிக்க வேண்டும். அதாவது, விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை மார்ச் 31, 2022 க்குள் முடிக்க வேண்டும் இல்லையெனில் அவர்களால் 11வது தவணையைப் பெற முடியாது.

Advertisment

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM KISAN) யோஜனாவின் 10வது தவணையை இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

PM-KISAN திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் நிதிப் பலன் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ.2000 வீதம் மூன்று சம தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்தநிலையில், விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை மார்ச் 31, 2022 க்குள் முடிக்காவிட்டால், அவர்களால் 11வது தவணையைப் பெற முடியாது. எனவே விவசாயிகள் விரைவாக eKYC செயல்முறையை முடிக்க வேண்டும்.

​​eKYC செயல்முறையான, வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கும் செயல்முறை சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் செய்யப்படலாம்.

படி 1: முதலில், விவசாயிகள் PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

படி 2: இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள 'e-KYC' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்

படி 3: ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்: ரூ.16 லட்சம் வருமானம்; உங்களுக்கான சிறந்த போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம் இதுதான்

படி 4: பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும்.

படி 5: அதை உள்ளிட்ட பிறகு 'Get OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

படி 6: இப்போது, ​ OTP ஐ உள்ளிட வேண்டும்.

இப்போது PM-Kisan e-KYC வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு விடும்.

இந்த செயல்முறை தொடர்பான மேலும் விவரங்களுக்கு, விவசாய பயனாளிகள் PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pm Kisan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment