Advertisment

ஆண்டுக்கு ரூ6000 மத்திய அரசு உதவி: இந்தத் திட்டத்தில் சேர இதுதான் கடைசி தேதி!

how to register PM-KISAN Scheme tamil news: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ .6000 என மூன்று 4 மாத தவணைகளில் தலா 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM-KISAN Scheme tamil news how to register PM-KISAN Scheme and benefits of PM-KISAN Scheme

PM-KISAN Scheme tamil news: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 2019 ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர்களுக்கும், விவசாய குடும்பங்களுக்கும், சாகுபடி நிலங்களுடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisment

இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ .6000 என மூன்று 4 மாத தவணைகளில் தலா 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம் துவங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 24ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத தகுதியான விவசாய குடும்பங்கள் மார்ச் 31க்கு முன் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் பதிவுசெய்து, அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரூ .2000 வழங்கப்படும் எனவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழங்க கூடிய தவணை பணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எம்-கிசான் திட்டம் பெற தகுதியானவர்கள் யார்?

தங்களுடைய பெயரில் சாகுபடி செய்யக்கூடிய நில உரிமையைக் கொண்ட அனைத்து நில உரிமையாளர் விவசாயிகளின் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பெற தகுயுடையோர்கள் ஆவர்.

ஒரு வருடத்தில் எத்தனை முறை பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படும்?

பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ், அனைத்து நில உரிமையாளர் விவசாயிகளின் குடும்பங்களுக்கும், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ .6000 நிதி வழங்கப்படும், ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ .2000 என்ற விதம் மூன்று சம தவணைகளில் செலுத்தப்படும்.

பி.எம்-கிசான் திட்டத்திற்கு எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி இங்கு காணலாம்.

முதலில் பிரதமர் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

உழவர் கார்னெர் (Farmers Corner) என்பதற்கு சென்று 'புதிய உழவர் பதிவு' (New Farmer Registration) என்ற விருப்பத்தில் கிளிக் செய்யவும்.

பின்னர் அதில் உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்யவும்.

தொடர்ந்து கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு மேலும் தொடரும் நிலையைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது அங்கு ஒரு படிவம் தோன்றும். அதில் உங்கள் சுயவிபரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை நிரப்பு வேண்டும். மேலும் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிலங்கள் தொடர்பான தகவல்களையும் நிரப்ப வேண்டும்.

அனைத்து விபரங்களையும் நிரப்பிய பின்னர் உங்கள் ​​படிவத்தை சமர்ப்பிக்கவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Pm Modi Pm Kisan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment