PM Kisan Latest Tamil News, PM Kisan News In Tamil, PM Kisan Loan News, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
PM Kisan Tamil News: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பிரதம மந்திரியின் கிஸான் திட்டத்தில் ரூபாய் 7,384/- கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயணாளி விவசாயியும் வருடத்துக்கு ரூபாய் 6,000/- த்தை மூன்று சம தவணைகளில் நேரடி வருவாய் உதவியாக பெற உரிமை உண்டு.
Advertisment
கடந்த மாதம் கோவிட் -19 க்கான நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டது முதல் மத்திய அரசு ரூபாய் 7,384/- கோடியை முதன்மையான நேரடி வருவாய் உதவி தொகை திட்டமாகிய பிரதம மந்திரி - கிஸான் (PM-Kisan) திடட்த்தில் பரிமாற்றம் செய்துள்ளது, என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு ஏப்ரல் -ஜூலை தவணையான தலா ரூபாய் 2,000/- த்தை உடனடியாக விநியோகிப்பதே இதன் இலக்கு. சமூகத்தில் உள்ள ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்காக அரசு மார்ச் 26 அன்று ரூபாய் 1.7 லட்சம் கோடி நிவாரண தொகுப்பை அறிவித்தது. நிதி ஆண்டு 2021 க்கான பிரதான மந்திரி கிஸான் திட்டத்தின் முதல் தவணையை விரைவாக வெளியிடுவது இந்த தொகுப்பின் ஒரு கூறு.
PM Kisan Status Check @pmkisan.gov.in :பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
தொகுப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த தொகையில் 65 சதவிகிதத்துக்கும் அதிகமானவை புதிய நிதியாண்டின் முதல் நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பரிமாற்றம் செய்யப்பட்டது. பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயணாளி விவசாயியும் வருடத்துக்கு ரூபாய் 6,000/- த்தை மூன்று சம தவணைகளில் நேரடி வருவாய் உதவியாக பெற உரிமை உண்டு.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பயனாளிகளில் 43 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் நன்மைகளை வெறும் 6 நாட்களில் பெற்றுள்ளனர். அதேபோல் மீதம் உள்ள பயனாளிகளும் தவணையை வெகு விரைவில் பெறுவார்கள். மார்ச் 31 ஆம் தேதி வரை 4 தவணைகளை பெற்றவர்கள் ஐந்தாவது தவணையை (ஏப்ரல் -டிசம்பர் காலம்) பெற தகுதியுடையவர்கள் என்பதால் நாங்கள் இன்னும் விநியோகத்தை தொடங்கவில்லை. ஐந்தாவது தவணையை பெற 3.5 கோடி விவசாயிகள் தகுதியுடையவர்கள் மேலும் பயன்கள் அவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டப் பிறகு மொத்த செலவினம் கணிசமாக மேம்படும், என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நிதியாண்டு 2021 முடிவில் தற்போதைய திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 11 கோடி விவசாயிகள் கொண்டுவரப்படுவார்கள். இதுவரை அரசு 9.4 கோடி விவசாயிகளின் விவரங்களை சரிப்பார்த்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளின் தகவல்களை பகிராததால் சுமார் 70 லட்சம் விவசாயிகள் உள்ள மேற்கு வங்கம் மட்டும்தான் பிரதான மந்திரியின் கிஸான் திட்டத்தின் வரம்புக்குள் வராத ஒரே மாநிலம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”