Advertisment

பிரதம மந்திரி கிசான்: 11வது தவணை வெளியீடு… ஆன்லைனில் இப்படி செக் பண்ணுங்க!

PM Kisan Next Installment Status check | 11th Installment Date Out 2022?: மத்திய அரசின் 11வது பிஎம் கிசான் தவணையை மே 31ம் தேதி வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Kisan 12th installment Rs 2000 to be credited in farmers account before Diwali

பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டம்

PM Kisan Yojana, how to check online 11th installment: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM KISAN) யோஜனா என்பது நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி பெறுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ரூ 2000 வீதம் மூன்று தவணைகளில் தொகை மாற்றப்படுகிறது. தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை, 10 தவணைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில், இத்திட்டத்தின் 11 வது தவணையின் கீழ் வரும் நாட்களில் மத்திய அரசு நிதியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிக்காக காத்திருக்கும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இது என்ன நல்ல செய்தியாக இருக்கும் என்றும் நம்பலாம். திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் PM Kisan eKYC க்கான காலக்கெடு மே 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதம மந்திரி கிசான் (PM Kisan) இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட 10வது தவணையை 11 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பெற்றுள்ளனர். சரியாகச் சொன்னால் 11,11,97,137 பேர் ஆவர். 10வது பிரதம மந்திரி கிசான் தவணையின் கீழ், கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான தகுதியான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெற்றுள்ளனர்.

publive-image

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 11வது தவணை எப்போது வெளியிடப்படும்?

மத்திய அரசின் 11வது பிஎம் கிசான் தவணையை மே 31ம் தேதி வெளியிடலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, மே 14, 2022 அன்று அரசாங்கம் நிதியை வெளியிடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரதம மந்திரி கிசான் (PM Kisan eKYC) செயல்முறையை எப்படி முடிப்பது?

படி 1: நீங்கள் முதலில் PM Kisan அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

படி 2: பின்னர் நீங்கள் Farmer’s Corner என்பதற்கு செல்ல வேண்டும். பிரிவின் கீழ், நீங்கள் eKYC 'விருப்பத்தைக்' காண்பீர்கள்.

படி 3: OTP அடிப்படையிலான eKYC செயல்முறையை முடிக்க உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். "OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது" என்று பிரதம மந்திரி கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Tamil Business Update Pm Kisan Pm Kisan Samman Nidhi Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment