PM Kisan Yojana Tamil News: விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கும் நோக்கில், விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் மன் தன் யோஜனாவை மத்திய அரசு உருவாக்கியது. பிரதமர் கிசான் மன் தன் யோஜனாவின் கீழ், விவசாயிகள் ஓய்வு பெற்றவுடன் மாதத்திற்கு 12 மாத தவணைகளில் ரூ.3,000 பெறுகிறார்கள்.
பிரதமர் கிசான் மன் தன் யோஜனாவுக்கு தகுதியானவர்கள் யார்?
இந்த திட்டத்தின் மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் கிசான் மன் தன் யோஜனாவிலிருந்து பயனடையலாம்.
இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய வடிவில் நிதியுதவி வழங்குவதாகும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
பிரதம மந்திரி கிசான் மன் தன் யோஜனாவில் சேருவது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மன் தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. பிரதமர் கிசான் மன் தன் யோஜனாவின் கீழ் விண்ணப்பிக்க விவசாயி கூடுதல் ஆவணங்களை பெற வேண்டிய அவசியமில்லை.
ஒரு விவசாயி நன்மைகளை பெறுவதற்கு முன்பு குறைந்தது 20 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். ஒரு விவசாயி18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
உதாரணமாக, உங்களுக்கு 18 வயது என்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .55 பங்களிக்க வேண்டும். உங்களுக்கு 30 வயது என்றால், நீங்கள் மாதத்திற்கு ரூ .1000 பங்களிக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ .200 வழங்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“