ஆண்டுக்கு ரூ6000 மத்திய அரசு உதவி: 10-வது தவணை வந்துவிட்டதா… செக் செய்வது எப்படி?

இதுவரை, பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1.58 லட்சம் கோடியை மத்திய அரசு நேரடியாக செலுத்தியுள்ளது.

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 10ஆவது தவணை வரும் வாரங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவுள்ளது.

இதற்கு தகுதியுள்ள விவசாயிகள், PM Kisan Yojana திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதைக் ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம்.

கிடைத்த தகவலின்படி, பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 10 வது தவணையின் ஒரு பகுதிக்கான நிதியை டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் மத்திய அரசு விடுவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.இதன் நோக்கமே, விளிம்புநிலையில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவது தான்.

இதுவரை, மத்திய அரசு 11.37 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 9 தவணைகளாக தலா ரூ.2000 செலுத்தியுள்ளது. இதுவரை, பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1.58 லட்சம் கோடியை அரசு நேரடியாக செலுத்தியுள்ளது.

எனவே, விரைவில் பணம் செலுத்தப்படவுள்ளதால், உங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்

Step 1: அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

step 2: முகப்பு பக்கத்தில்‘விவசாயிகளின் பகுதி’ (Farmer’s Corner section) என்பதை கிளிக் செய்யவும்.

step 3: பயனாளி நிலை’ (Beneficiary status) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

Step 4: அடுத்ததாக உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை பதிவிட வேண்டும்.

Step 5: Get Report ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.

தற்போது, அனைத்து பயனாளிகளின் பட்டியலை பெறுவீர்கள். அதில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm kisan yojana to release 10th instalment soon check name in beneficiary list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com