நெருங்கிய கடைசி தேதி… ஆண்டுக்கு ரூ.6000! மத்திய அரசு திட்டத்திற்கு பதிவு செய்தீர்களா?

திட்டத்தால் 125 மில்லியன் விவசாயிகள் பயன்பெறுவதற்காக, 75,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள விவசாயிகள் மட்டுமே பயன்பெற இயலும்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவித் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018-ல் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தால், வருடந்தோறும் விவசாயிகளுக்கு தலா 6,000 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால், குறைந்த அளவிலான வருமானம் உடைய சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

மத்திய அரசு, இத்திட்டத்தால் 125 மில்லியன் விவசாயிகள் பயன்பெறுவதற்காக, 75,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள விவசாயிகள் மட்டுமே பயன்பெற இயலும். இந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்துக் கொள்ளாத விவசாயிகள், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவு செய்தால், திட்டத்தின் மூலம் வழங்க்கப்படும் மானியத் தொகையின் ஒரு பகுதியாக, 4000 ரூபாயை வரும் மே மாத இறுதிக்குள் தங்களது வங்கிக் கணக்கின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகள், PM Kissan எனும் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விவசாயிகள் பக்கத்தில், தங்களை விவசாயி என உரிய ஆவணங்களான ஆதார், நில உரிமை பத்திரம்,வங்கிக் கணக்கு, குடியுரிமைச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்வதன் மூலம் இணைந்துக் கொள்ளலாம்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm kissan scheme 6000 year lastdate march 31 apply soon

Next Story
சுலபமான சேமிப்பு திட்டம்! SBI பிஎஃப் அக்கவுன்ட் ஆன்லைனில் தொடங்குவது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com