சொந்தத் தொழில்; ரூ10 லட்சம் வரை மத்திய அரசு கடன்: தேவையான ஆவணங்கள் என்ன?

சொந்த தொழில் தொடங்க திட்டமா? மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

PM MUDRA scheme offers upto Rs.10 lakh loan to start own business: நாட்டில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் முக்கியமான திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா. இது தொழில்முனைவோர்களுக்கு தகுதி அடிப்படையில் கடனுதவி வழங்கும் திட்டமாகும்.

கொரோனா தொற்றுநோயால், நாட்டில் பலரின் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேலை செய்பவர்களின் வருமானமும் குறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு, இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில், தொழில்முனைவோராக நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் அதற்கான போதுமான நிதி இல்லை. அத்தகையவர்களுக்கு நிதி உதவி வழங்கக்கூடிய பல அரசு திட்டங்கள் உள்ளன. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மிகவும் வெற்றிகரமான அரசாங்க திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம், அரசு, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது.

பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு தொழில்முனைவோருக்கு கடன்கள் எளிதாகக் கிடைக்கும். இதன் கீழ் அரசு ஏற்கனவே பல கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது. மேலும், பிணையாக எந்த ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட தேவையில்லை என்பதால் பல்வேறு ஏழைத் தொழிலாளர்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு முத்ரா கடன் திட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் செய்யும் தொழிலில் முழுவதுமாக தோல்வியுற நேர்ந்தால் கடனை திருப்பி செலுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

கடன் தொகை எவ்வளவு கிடைக்கும்?

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், கடன் வாங்குபவர்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

சிஷூ பிரிவு: ரூ.50,000 வரை கடன் பெறலாம்.

கிஷோர் பிரிவு: ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் பெறலாம்.

தருண் பிரிவு: ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

முத்ரா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்பினால், அதற்காக முத்ரா யோஜனாவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அதன் விண்ணப்பத்தின் செயல்முறை மிகவும் எளிதானது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற, முதலில் உங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

வீட்டின் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை தொடர்பான தகவல்கள், ஆதார் அட்டை, பான் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களை நீங்கள் வங்கியிடம் வழங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடனுக்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு?

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் நிலையான வட்டி விகிதம் இல்லை. வெவ்வேறு வங்கிகள் முத்ரா கடன்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை விதிக்கலாம்.

வணிகத்தின் தன்மை மற்றும் அதில் உள்ள ஆபத்து ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி தீர்மானிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதல்களின்படி வங்கிகள் தகுந்த வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm mudra scheme offers upto rs 10 lakh loan to start own business

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express