Advertisment

PMSMY ஓய்வூதிய திட்டத்தில் ரூ. 36 ஆயிரம் வரை பெற என்ன செய்ய வேண்டும்?

PMSMY pension scheme invest rs.1.80 per day get upto rs.36000 for unorganised workers: PMSMY பென்சன் திட்டம்; தினமும் ரூ.1.80 முதலீடு செய்தால், ரூ. 36000 வரை ஓய்வூதியம் பெறலாம்

author-image
WebDesk
New Update
ரூ. 210 முதலீட்டில் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டம்; விபரங்கள் இதோ…

ஓய்வூதியம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. குறிப்பாக உங்கள் முதுமையில் உங்களுக்கு நிலையான வருமானம் வர ஓய்வூதியம் அவசியம். முதுமையில் நிலையான வருமானத்திற்கு நிறைய பேர் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

Advertisment

நம்மிடைய, முதுமையில் நிலையான ஓய்வூதியத்தை வழங்கும் பல நல்ல திட்டங்களை பல்வேறு நிதி சார்ந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்று 'பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா' (PMSMY). இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ .1.80 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் ரூ .3000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களுக்கு, அதாவது பணிப்பெண்கள், செருப்பு தைப்பவர்கள், தையல்காரர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், சலவை செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாகும். அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சுமார் 42 கோடி மக்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள்.

உங்கள் மாத வருமானம் ரூ.15000 க்கும் குறைவாக இருந்தால், நீங்கள் நாற்பது வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், இத்திட்டத்தில் சேர்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் 2019 இல் மோடி அரசால் இணைக்கப்பட்டது மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 10 கோடி தொழிலாளர்களை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால், வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் நபர்கள் அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அல்லது ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (ESIC) போன்றவற்றில் பயன் அடைபவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு வயதினருக்கு ஏற்றாற்போல் முதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 18 வயதினராக இருந்தால், நீங்கள் மாதந்தோறும் 55 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், உங்களுக்கு 29 வயது என்றால் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் மற்றும் உங்களுக்கு 40 வயது என்றால் 40 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு முன்பு பயனாளி இறந்துவிட்டால், ஓய்வூதியத்தில் 50 சதவிகிதம் அவரது மனைவிக்கு வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

PMSMY திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க, உங்களுக்கு முக்கியமாக மூன்று ஆவணங்கள் தேவை

* ஆதார் அட்டை

* IFSC யுடன் சேமிப்பு கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு

* மொபைல் எண்

இந்த திட்டத்தில் சேர ஊழியர் பொது வருங்கால நிதி அமைப்பின் (EPFO) இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை (CSC) அணுகலாம். இது தவிர, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி), மாநில ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐசி), இபிஎஃப்ஒ அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் சென்று விண்ணப்பங்களைச் செய்யலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment