/tamil-ie/media/media_files/uploads/2022/03/bloomberg-lic-ipo-life-insurance-corporation-1200-1-1.jpg)
எல்ஐசியின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
மக்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக பொருளாதார பாதுகாப்புடன் கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில், பல ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில், அஞ்சல் மற்றும் வங்கி திட்டங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய திட்டங்களும் உள்ளன.
அந்த வகையில், எல்ஐசியின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா ( Pradhan Mantri Vaya Vandana Yojana) திட்டம் முதன்மையானது. 2017இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2020 மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31,2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால் போதும். குறைந்தப்பட்சம் மாதம் ரூ.1000, காலாண்டு ரூ.3 ஆயிரம், அரையாண்டு ரூ.6 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வரையும், அதிகப்பட்சமாக மாதம் ரூ.9250, காலாண்டு முடிவில் ரூ.27750, ஆண்டுக்கு ரூ.1,11,000 வரை ஓய்வூதியம் பெறலாம்.
அதேபோல் பிரிமீயம் ரூ.15 லட்சத்தை தாண்டக் கூடாது, குறைந்தப்பட்ச பிரிமீயம் மாத ஓய்வூதியத்துக்கு ரூ.1,62,162ம், காலாண்டுக்கு ரூ.1,61,074ம், அரையாண்டுக்கு ரூ. 1,59,574ம், ஆண்டுக்கு ரூ. 1,56,658ம் பிரிமீயமாக செலுத்த வேண்டும்.
அதிகப்பட்ச ஓய்வூதியம்
ரூ.15 லட்சம் பிரீயம் செலுத்திய நபர்களுக்கு மாதம் ரூ.9250ம், ரூ.14,89,933 செலுத்திய நபர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை ஓய்வூதியமாக ரூ.27750ம், ரூ.14,76,064 பிரீமியத்துக்கு ஆறு மாத ஓய்வூதியம் ரூ.55500 ஆகவும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ஓய்வூதியமாக ரூ.1,11,000 கிடைக்கும்.
திட்டத்தில் மாத ஓய்வூதிய வட்டி 7.4% ஆகவும், காலாண்டு ஓய்வூதிய வட்டி 7.45% எனவும், அரையாண்டு ஓய்வூதிய வட்டி 7.52% ஆகவும், ஆண்டு ஓய்வூதிய வட்டி 7.66% ஆகவும் உள்ளது.
பாலிசிதாரர் இறக்க நேரிட்டால்
10 ஆண்டு பாலிசி காலத்துக்குள் பாலிசிதாரர் இறந்தால் பாசிலி முதர்வு தொகை நாமினிக்கு திருப்பி அளிக்கப்படும். பாலிசியில் 3 ஆண்டுக்கு பிறகு கடன் வசதி பெறலாம். 75 சதவீதம் வரை கடன் வசதி வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.