பஞ்சாப் நேஷனல் வங்கி ரூபாய் 2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை திருத்தி உள்ளது. திருத்தப்பட்ட இந்த புதிய விகிதங்கள் ஜனவரி, 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
வங்கி 180 முதல் 270 நாட்கள் வரையிலான வட்டி விகிதங்களை 50 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இந்த டெர்ம் டெபாசிட்கள் மூலம் தற்போது பொது குடிமக்களுக்கு 6% வட்டி கிடைக்கும். மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி FD விகிதங்களை 271 நாள்களில் 45 bps உயர்த்தி 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு உயர்த்தியுள்ளது.
இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பொது குடிமக்களுக்கு 7.25% வட்டிவிகிதத்தை அளிக்கும். 400 நாட்கள் முதிர்வு காலத்தின் போது, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.80% இலிருந்து 7.25% ஆக 45 bps விகிதங்களை உயர்த்தியுள்ளது.
திருத்தத்திற்குப் பிறகு, PNB பொதுக் குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புத் தொகையில் 3.5% முதல் 7.25% வரை வழங்குகிறது.
PNB FD விகிதங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி 444 நாட்களில் FD விகிதங்களை 7.25% லிருந்து 6.8% ஆக 45 bps குறைத்துள்ளது. மூத்த குடிமக்கள், சூப்பர் மூத்த குடிமக்களுக்கான PNB சமீபத்திய FD விகிதங்களை பார்க்கலாம்.
சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதத்தையும், சூப்பர் சீனியர்களுக்கு 4.3% முதல் 8.05% வரையிலும் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்குகிறது.
SBI சமீபத்திய FD விகிதங்கள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) நிரந்தர வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் ₹2 கோடிக்கு குறைவான FDகளுக்கு பொருந்தும். புதிய வட்டி விகிதங்கள் இன்று 27 டிசம்பர் 2023 முதல் அமலுக்கு வருகிறது.
சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.5 முதல் 7% வரையிலான விகிதங்களை எஸ்பிஐ வழங்குகிறது.
இந்த வைப்புத்தொகையில் மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) கூடுதலாகப் பெறுவார்கள்.
பாங்க் ஆஃப் பரோடா சமீபத்திய FD விகிதங்கள்
பாங்க் ஆஃப் பரோடா பல்வேறு முதிர்வு பக்கெட்டுகளுக்கான சில்லறை கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகளில் இருந்து 125 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
இந்த விகிதங்கள் ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு இன்று, டிசம்பர் 29 முதல் அமலுக்கு வரும். சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, பாங்க் ஆஃப் பரோடா பொது வாடிக்கையாளர்களுக்கு 4.25 % முதல் 7.255 வரையிலான வட்டி வரம்பை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா மூத்த குடிமக்களுக்கு ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.75% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“