பஞ்சாப் நேஷனல் வங்கி vs பேங்க் ஆஃப் பரோடா: எந்த வங்கியில் எஃப்.டி-க்கு அதிக வட்டி?

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றன. தற்போது தனியார் மற்றும் ஸ்மால் வங்கிகளைப் போன்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் நல்ல ரிட்டனை வழங்குகின்றன.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றன. தற்போது தனியார் மற்றும் ஸ்மால் வங்கிகளைப் போன்று, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் நல்ல ரிட்டனை வழங்குகின்றன.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வட்டி வழங்குகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இன்றைய காலகட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் குறைந்த இடர்பாடுகளை கொண்ட முதலீட்டு திட்டங்களாக உள்ளன. பங்குகள், பரஸ்பர நிதிகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளில் ரிஸ்க் குறைவு. மேலும், இன்றைய காலக் கட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் நல்ல வட்டி விகிதத்தையும் வழங்குகின்றன.

Advertisment

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்கள் கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி பெறுவார்கள். அம்ரித் கலாஷ் போன்ற சிறப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் மேற்கூறியதை விட சற்று அதிகமாக காணப்படும்.

தற்போது நாம், பஞ்சாப் நேஷனல் வங்கி vs பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றுக்கு இடையேயான வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

Advertisment
Advertisements

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சாதாரண குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 3.5% முதல் 7.25% வரை வட்டி வழங்குகிறது.

தொடர்ந்து, 7 நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதத்தையும், சூப்பர் சீனியர்களுக்கு 4.3% முதல் 8.05% வரையிலும் வங்கி வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 8, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா, ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 4.25 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதேபோல் ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: