கொரோனாவின் தாக்கத்தினால், பாதுக்காப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இந்த கோல்டு இடிஎஃப்கள் முதலீட்டினை ஈர்த்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. Gold Exchange Traded Funds என்று அழைக்கப்படும் கோல்டு இடிஎஃப்களில் எந்த செலவினமும் இல்லை. முதலீடு செய்ய அதிக ஆரம்பகட்ட தொகை, இன்சூரன்ஸ், அதிக விற்பனை செலவுகள் இல்லாதது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கோல்டு இடிஎஃப்களை வாங்க பங்குச் சந்தை வர்த்தகத்திற்கான டீமாட் கணக்கு தேவை. இதுமட்டும் இருந்தால் ஈசியாக வாங்கிவிடலாம். இதில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான 6 விஷயங்களை பார்க்கலாம்.
கோல்டு இடிஎஃப்களை பங்குகள் போல் வர்த்தகம் செய்யலாம். நீங்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது போன்றே, கோல்டு இடிஎஃப், கோல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அங்கு நீங்கள் பங்குகளை போல விற்கவும் முடியும், வாங்கவும் முடியும். உங்களது கோல்டு இடிஎஃப்களை விற்கும்போது அப்போதைய தங்கத்தின் விலையை பெறுவீர்கள்.
இதனை டீமேட் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அல்லது பங்கு தாரர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். இதனை ஆபரணத் தங்கத்துடன் ஒப்பிடும்போது செலவுகள் குறைவுதான். தங்கத்தின் விலையை பொறுத்தே, இதன் விலை வர்த்தகமாகிறது. ஆக இதன் மூலம் இதன் வெளிப்படைத் தன்மையை அறிய முடியும்.
கோல்டு இடிஎஃப் பொறுத்தவரை, வாங்குவதும் விற்பதும் அவற்றின் AUM ஐ பாதிக்காது. வழக்கமான பரஸ்பர நிதிகளுக்கு எதிராக, முதலீட்டாளர்கள் அவற்றை வாங்குவது அல்லது விற்பது AUM நிதியை அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது. இது தங்க இடிஎஃப்களுக்கு நடக்காது.
கோல்டு இடிஎஃப்கள் செபியால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன மற்றும் அவை தங்கமாக பாதுகாவலரால் பராமரிக்கப்படுகின்றன: கோல்டு இடிஎஃப்கள் தங்கத்தை அவற்றின் அடிப்படை சொத்தாகக் கொண்டுள்ளன.
தங்க இடிஎஃப் இன் விலை அபாயம்: இவை எதிர்கொள்ளும் ஒரே ஆபத்து விலைதான். தங்கத்தின் விலை குறையும்போது தங்க இடிஎஃப்பின் மதிப்பு அதே விகிதத்தில் குறைகிறது.
கோல்டு இடிஎஃப் வரிவிதிப்பு: ஈக்விட்டி அல்லாதவையாகக் கருதப்படுவது, குறுகிய கால ஆதாயங்களுக்காக 3 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான கால அவகாசம் கருதப்படுகிறது. LTCG குறியீட்டு நன்மைகளை வழங்கிய பின்னர் 20% வரி விதிக்கப்படுகிறது.
பொதுவாக கோல்டு இடிஎஃப்கள் மற்றவைகளுடன் ஒப்பிடும்போதும் சிறந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நினைத்தவுடன் அன்றைய விலை நிலவரத்திற்கு ஏற்ப வாங்கலாம், விற்கலாம், கட்டணமும் குறைவு தான். பாதுகாப்பானதும் கூட, ஆனால் தங்க பார்கள் மற்றும் நகைகளை பாதுகாக்க வேண்டும், இதில் நகையாக வாங்கும்போது அதிக கட்டணம் உள்ளது. ஆக முதலீட்டு நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கோல்டு இடிஎஃப்களில் முதலீடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil