scorecardresearch

பிரபல வங்கியில் ரூ. 699 க்கு மருத்துவ காப்பீடு…. சரியான வாய்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!

மருத்துவமனை சிகிச்சைக்கான இழப்பீடு கிடைக்கும்

பிரபல வங்கியில் ரூ. 699 க்கு மருத்துவ காப்பீடு…. சரியான வாய்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!
lic scheme lic online lic interest lic ,

policy bank icici bank policy policy online : 699 ரூபாயில் ஒரு வருடத்திற்கான சுகாதார காப்பீட்டு திட்டத்தை வழங்க திட்டமிட்டுள்ளதுஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் ஆன்லைன் ப்ரீபெய்ட் கார்டு பரிவர்த்தனை நிறுவனமான ப்ரீ பே கார்டுடன் (Free Pay Card) இணைந்து சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, ப்ரீ பே கார்டு வைத்திருப்பவர் விபத்துக்கு ஆளானால் அல்லது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தால், அவருக்கு சுகாதார காப்பீடு (Health Insurance) மூலம் இழப்பீடு கிடைக்கும்

இந்த சுகாதார காப்பீட்டு திட்டம், Free Pay Card அட்டை வைத்திருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ICICI Lombard வழங்கும் இந்த சுகாதார காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சைக்கான பணம், இறப்பு நேர்ந்தால் இழப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சை மற்றும் பிற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சைக்கான இழப்பீடு கிடைக்கும்

மருத்துவமனையில் சிகிச்சைக்கான ரொக்க இழப்பீட்டின் கீழ், காப்பீட்டாளருக்கு மருத்துவமனையில் அதிகபட்சம் 30 நாட்களுக்கு ரூ .60,000 கிடைக்கும். ஒரு வருடத்திற்கு 699 ரூபாய் செலுத்தி, இந்த காப்பீட்டை பெறலாம். இந்த காப்பீடு நாட்டின் எந்தவொரு அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் பெறும் சிகிச்சைகான இழப்பீடு வழங்கப்படும்.

1 வருடத்திற்கு 699 ரூபாய் செலுத்துவதன் மூலம் தனிப்பட்ட விபத்து காப்பீட்டையும் பெறலாம். விபத்தில் மரணம் ஏற்பட்டால் பெற்றோருக்கு 90,000 ரூபாயும் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், ரூ .10 லட்சம் ரூபாயும் கிடைக்கும்.

காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மூளை காய்ச்சல் போன்றவற்றிற்கான சிகிச்சைக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் குறைந்தது 48 மணிநேர ஹாஸ்பிலைசேஷன் தேவை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

source : facebook

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Policy bank icici bank policy policy online icici bank policy online icici policy