பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் ‘EEE’ வரி சேமிப்பு நன்மைகள் மற்றும் அதிக வருமானம் ஆகியவற்றால் பிரபலமானது என்றாலும், நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, பல வரி சேமிப்பு அஞ்சல் அலுவலக திட்டங்கள் PPF ஐ விட மிகவும் பிரபலமானவை.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, 2021-22ஆம் ஆண்டில் பிபிஎஃப் குறைந்த மொத்த மற்றும் நிகர வசூலை பெற்றுள்ளது.
2021-22இல் PPFக்கான மொத்த வசூல் ரூ.21,302 கோடி ஆகும். ஆனால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ரூ.32,507 கோடி மொத்த வசூலைப் பெற்றுள்ளது. NSC மற்றும் SSY இரண்டும் முறையே ரூ.40,264 கோடி மற்றும் ரூ.24,060 கோடி மொத்த வசூலைப் பெற்றுள்ளன.
நிகர வசூல் அடிப்படையில், 2021-22 இல் NSC, SCSS மற்றும் SSY ஐ விட PPF குறைந்த தரவரிசையில் உள்ளது. NSC, SCSS மற்றும் SSY ஆகியவை இந்த காலகட்டத்தில் 19,000 கோடி ரூபாய்க்கு மேல் நிகர வசூல் செய்துள்ளன, அதே நேரத்தில் PPF திட்டத்தின் கீழ் நிகர வசூல் சுமார் 13,000 கோடியாக இருந்தது.
2021-22ல், NSC இன் கீழ் மொத்த நிகர வசூல் ரூ.19,619.86 ஆகும். SCSS இன் மொத்த நிகர வசூல் ரூ.22,129 கோடியாகவும், SSYக்கு ரூ.23,486 கோடியாகவும் இருந்தது.
இதே காலக்கட்டத்தில் PPF இன் கீழ் நிகர வசூல் வெறும் 12,846 கோடி ரூபாய் ஆக உள்ளது.
இந்த திட்டங்கள் அனைத்தும் வெவ்வேறு நோக்கங்களையும் அம்சங்களையும் கொண்டுள்ளன.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) பெண் குழந்தைக்கு நன்மை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், SCSS மூத்த குடிமக்களுக்கு நன்மை வழங்குகிறது.
PPF முதலீட்டு திட்டம் எதிர்காலத்தில் சில நிதி இலக்குகளை அடைய அல்லது ஓய்வூதியத்திற்கான கார்பஸை உருவாக்க பயன்படுகிறது. NSC தனிநபர்களால் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு கருவியாக உள்ளது. இதில் பிரிவு 80C இன் கீழ் டெபாசிட்கள் மீதான வரிச் சலுகைகளையும் அனுபவிக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“