உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் சார்பில் கேவியட் மனு: ஆலையை இயங்க வைக்க தீவிர முயற்சி

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 6மாதம் மூடிந்திருந்ததில் ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டியளித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை  மீண்டும் திறக்ககோரி  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் அந்நிறுவனத்தின் சிஇஓ  பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “ போராட்டத்திற்கு பிறகு  கடந்த 6 மாதங்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகத்திற்கு சுமார் ரூ. 1500 கோடி  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆலை செயல்படாததால், தாமிரம் உற்பத்தி முடங்கியுள்ளதுடன், எங்களைச் சார்ந்துள்ள தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளன.  ஒரு மாதத்திற்கு  3000 ஆயிரம் முதல் 1200 கோடி வரை வருவாய் பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது  நிறுவனத்திற்கு  ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு.

இருப்பினும், மீண்டும் தூத்துக்குடியில் ஆலை இயக்க நிறுவனம் அனைத்து விதமான முயற்சிகளிலும்  ஈடுப்பட்டு வருகிறது. ஆலையில் வேலை செய்து வந்த தொழிலாளிகள் பலரும்   தங்களது அன்றாட வாழ்வை இழந்துள்ளனர். விரைவில் இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று (17.12.18) காலை  ஸ்டெர்லைட் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. 3 வாரத்திற்குள் இதனை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து இன்றைக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன் அறிவிப்பு இன்றி தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close