இந்திய தபால் துறை சேமிப்பு திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.. அதில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பானதாகவும், நிறைய லாபமும் கிடைக்கிறது. நகர வாசிகள் முதல் கிராம மக்கள் வரை கணக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் சேமிப்பு திட்டம் குறித்து அறிய தபால் நிலையத்துக்கு நேரடியாக செல்வதற்கு பதிலாக, உட்கார்ந்த இடத்திலே தீர்வு காண புதிய ஐ.வி.ஆர். சேவையை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.
பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜ்னா, என்எஸ்சி மற்றும் பிற சிறுசேமிப்புகளின் கணக்கு வைத்திருப்பவர்கள்,முதலீட்டுக்கான வட்டி லாபம், ஏடிஎம் கார்டு பிளாக் செய்வது, புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற முக்கியமான தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்ள 18002666868 டோல் ஃபிரீ நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வசதியை தபால் நிலைய திட்டங்களில் பதிவு செய்த மொபைல் நம்பரில் இருந்து மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
தொலைப்பேசி எண்ணில் தகவல்களை ஹிந்தி மொழியில் கேட்க 1ஐ அழுத்த வேண்டும். தபால் துறை சேவைகள் மற்றும் புதிய ஏடிஎம் கார்டுகளைப் பெற 2ஐ அழுத்த வேண்டும். ஏடிஎம் தொடர்பான சேவைகளுக்கு 3ஐ அழுத்த வேண்டும். வட்டி மற்றும் வரி விலக்கு பற்றி அறிய, 4 ஐ அழுத்த வேண்டும்.
அனைத்து சேமிப்பு திட்டங்களின் கணக்கு இருப்பு பற்றிய தகவலுக்கு 5 ஐ அழுத்த வேண்டும். சேமிப்பு கணக்கு பரிவர்த்தனைகள் பற்றி அறிய, கணக்கு எண்ணை பதிவிட்டு, இறுதியில் ஹாஷ்(#) பதிவிட வேண்டும்.ஏடிஎம் கார்டை பிளாக் செய்திட 6ஐ அழுத்த வேண்டும். மற்ற அனைத்து சேவைகளைப் பெற 7ஐ கிளிக் செய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil