அஞ்சல் சேமிப்பு: பணத்தை சேமிக்க வேண்டும் என எண்ணம் தொடங்கியதுமே நம்மில் பலரும் செல்வது வங்கியை தேடி தான். மியூட்சுவல் ஃபண்ட் தொடங்கி, சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு நிதி என பல திட்டங்களில் பணத்தை சேமிப்போம், தேவைப்படும் போது எடுப்போம். ஆனால் பொதுமக்களுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கும் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் பற்றி பலரும் நினைவுக் கொள்ள மறந்து விடுகிறோம்.
பிரபல வங்கிகளில் ஒரே மாதத்தில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இதனை வாடிக்கையாளர்கள் எதிர்த்தாலும் இப்போது இந்த நடைமுறை பழகத்தில் இருந்து வருகிறது. ஆனால் அஞ்சல் சேமிப்பில் வங்கி கணக்குகளுக்கு இணையான சேமிப்புக் கணக்கை மிக எளிதாக தொடங்க முடியும்.நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் உள்ள நிலையில் 20 ரூபாய் செலுத்தி சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும்.
இந்த சேமிப்பு கணக்கில் செக் புக் சேவை வேண்டும் என்றால் 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்வகிக்க வேண்டும். இதுவே செக் புக் தேவையில்லை என்றால் சேமிப்புக் கணக்கில் 50 ரூபாய் இருந்தால் போதுமானது.
சேமிப்புக் கணக்கில் பணத்தை அனைத்துத் தபால் நிலையங்களிலும் டெபாசிட் செய்ய முடியும், திருப்பி எடுக்க முடியும். ஏடிஎம் வசதியும் உண்டு. ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தைத் திருப்பி எடுக்க முடியும். இப்படி வங்கிகளையும் மிஞ்சும் அளவிற்கு போஸ்ட் ஆபிஸ் சேவிங்கிஸ்லில் ஏகப்பட்ட திட்டங்கள் உள்ளன.
டெபிட் கார்டு பயனாளியா? உங்கள் பணம் வீணாக செலவாகிறதா?
கட்டணத்தை பொருத்தவரையில் அஞ்சல் சேமிப்பு மிகச் சிறந்த அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஏடிஎம்சேவையும் ஒன்று. அஞ்சல் சேமிப்பும் ஒன்று. அஞ்சல் சேமிப்பு கணக்கில் ஏடிஎம் சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் இதோ.
எடிஎம்சேவை :
வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானலும் போஸ்ட் ஆபிஸுக்கு சொந்தமான ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.
மற்ற எடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 3 முறை இலவசம். அதற்கு மீறினால் ரூ. 20 கட்டணம். ஒரு நாளைக்கு ஏடிஎம் மூலம் 25,000 ரூ வரை எடுத்துக் கொள்ளலாம்.