Post office bank Tamil News: தபால் அலுவலக மாத வருமான திட்டம் (Post Office Monthly Income Scheme) என்பது மத்திய அரசின் சிறிய சேமிப்பு திட்டங்களுள் ஒன்று ஆகும். இது ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை சம்பாதிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஒரு தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் திறந்து, மொத்த தொகையை டெபாசிட் செய்யலாம். மற்றும் முதலீடுகளின் அடிப்படையிலும் பணம் சம்பாதிக்கலாம். இந்த திட்டதின் காலவரையறை 5 ஆண்டுகள் ஆகும்.
மேலும், உங்கள் முதலீட்டிற்கான 100 சதவீதம் உத்தரவாதத்தை அரசு தருகிறது. எந்தவொரு இந்திய குடிமகனும் தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க, அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது அவசியம் ஆகும். இதற்காக, நீங்கள் ஐடி ஆதாரத்தை வழங்க வேண்டும். அதில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வழங்கினால் போதுமானது. இதனுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும் உங்களுக்கு தேவைப்படும்.
ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ .4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதேவேளையில் கூட்டுக்கணக்கில் அதிகபட்சமாக ரூ .9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த கூட்டுக் கணக்கில் 3 இளையோர்கள் சேர்ந்து கூட முதலீடு செய்யலாம். ஆனால் முதலீட்டு வரம்பு ரூ .9 லட்சம் மட்டுமே.
நடப்பு காலாண்டில் தபால் அலுவலக மாத வருமான திட்டத்திற்கு 6.6 சதவீதம் வரை வருடாந்திர வட்டி விகிதத்தை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )