சந்தையில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. எனினும், முதலீட்டாளர்கள் ஆபத்த இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய முதலில் விரும்புகிறார்கள்.
இது போன்ற முதலீட்டாளர்களுக்கு அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் சிறந்த தேர்வாக உள்ளன. அதே நேரத்தில், வங்கி எஃப்டியை விட அதிக வட்டியை வழங்கும் திட்டங்கள் தபால் அலுவலகத்தில் உள்ளன.
அத்துடன், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வரிச் சலுகையும் கிடைக்கும். இதில் பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) உள்ளது.
இந்தத் திட்டத்தில் 8 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. தொடர்ந்து, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கு 7.7 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
மேலும் இதில் 1.50 லட்சம் வரையிலான திட்டத்துக்கு வரி சலுகையும் உண்டு. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கும் 8.2 சதவீதம் வட்டி கிடைக்கும்.
தொடர்ந்து 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டைம் டெபாசிட் திட்டங்களுக்கு போஸ்ட் ஆபிஸ் 7.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
அதேநேரம் 5 ஆண்டுக்குள்ளான எஃப்.டி. திட்டங்களுக்கு 6.50 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“