அஞ்சல சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்கள் எப்போதும் விரும்பும் ஒரு சிறுசேமிப்பு திட்டமாகவே உள்ளன. சிறு துளி பெருவெள்ளம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்றளவும் அஞ்சல திட்டங்கள் திகழ்கின்றன. மத்திய அரசின் திட்டம், இடர்பாடுகள் குறைவு, 80சி வருமான வரி விலக்கு என அஞ்சல முதலீட்டு திட்டங்களின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் தற்போது, கிசான் விகாஷ் பத்ரா அஞ்சல சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்.
Advertisment
சிறு துளி பெரு வெள்ளம்
இந்தத் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுதோறும் 6.9 கூட்டு வரி அளிக்கப்படுகிறது. ஆகையால் 124 மாதங்களில் (10 ஆண்டுகள் 4 மாதங்கள்) உங்கள் பணம் இரட்டிப்பாகும். முதலீட்டாளர்கள் குறைந்தப்பட்சம் ரூ.100, ரூ.1000 என சேமிக்கலாம். அதிகப்பட்ச வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்கை தனிநபர் தொடங்கலாம். முதலீட்டாளர் சிறுவராக இருந்தால் பாதுகாவலர் ஒருவர் அவசியம். முதலீட்டாளர்களுக்கு 10 வயது பூர்த்தியான பின்பு தனிக்கணக்கு தொடங்கி கொள்ளலாம். இந்தக் கணக்கை தொடங்கியவர் மரணித்துவிட்டால் அவரது சட்டவாரிசு பணம் செல்லும். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலும் சேமிப்பு கணக்கை மாற்றிக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil