Post Office time deposit vs SBI fixed deposit: ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வுக்குப் பிறகு பல்வேறு வங்கிகள், புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் வைப்பு விகிதங்களை அதிகரித்துள்ளன.
மத்திய வங்கி மே 2022 முதல் ரெப்போ விகிதத்தை 250 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இதனால், தொடர்ச்சியாக ஆறு ரெப்போ ரேட் உயர்வுகள் உள்ளன.
இந்நிலையில், சிறுசேமிப்புத் திட்டங்களின் கீழ் இரண்டு வருட அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகையின் வருமானம் 6.9 சதவீதமாக உள்ளது.
அதே நேரத்தில் மூன்று ஆண்டுகளுக்கான POTD மீதான விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஓராணடுக்கு 6.8 சதவீதமும், 2 ஆண்டுக்கு 6.9 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கு 7 சதவீதமும், 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமும் வட்டியாக கிடைக்கும்.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான SBI FDகள் பொது வாடிக்கையாளர்களுக்கு 3% முதல் 7.1% வரை வழங்கப்படும். இந்த வைப்புத்தொகையில் மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) கூடுதலாகப் பெறுவார்கள்.
மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவான வைப்புகளுக்கு வழங்கும் வட்டி விகிதம் 6.8 சதவீதம் ஆகும்.
எஸ்பிஐயின் இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 7 சதவீதம் ஆகும். இந்த வட்டி விகிதங்கள் 2023, பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“